Skip to content
TCW Songs

Artist

Evg. David Raja

Evg. தாவீது ராஜா

78 songs

பெயர்: Eva தாவீது ராஜா பிரியாமானவர்களே நான் ஒரு இந்து குடும்பத்தைச் சார்ந்தவன். இயேசுவை அறியாதவன். எனக்கு திருமணம் ஆனது. நானும் என் மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்தோம். இதற்கிடையில் என் மனைவியை ஏதோ பிசாசு பிடித்துக்கொண்டு அவளுடைய சரீரத்தை நாளுக்கு நாள்நோயினால் வாதித்தது.நான் மருத்துவரிடம் கொண்டு காட்டினாலும் என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. உண்மை தெய்வம் எது என்று வேதனை கொண்டேன் அது மாத்திரமா? திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லை ஏன் என்றால் இவளை பிடித்த அந்த அசுத்த ஆவியானது கர்ப்பம் தரிக்க விடாமல் தடுத்தது எங்களை எல்லோரும் கேலி செய்தார்கள். மனம் உடைந்து நமக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று நானும் என் மனைவியும் மருத்துவர் இடத்தில் சென்று எங்களின் சரீரத்தை பரிசோதித்தோம் மருத்துவர் உங்களுக்கு குழந்தை பிறக்காது ஏன் என்றால் உங்கள் இரத்தத்தில் வலிமை இல்லை. ஆகையால் நீங்கள் ஒரு வருடத்திற்கு பல மாத்திரைகளை சாப்பிடுங்கள் அப்படி சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்று சொல்லி விட்டார். நாங்கள் வேதனையோடு யார் எங்கள் வேதனையை தீர்ப்பார் என்று கலங்கிய நிலையில் இருந்தோம். அப்பொழுது இயேசு ஒரு தெய்வம் அவரிடம் வந்து உங்கள் வேதனையை சொல்லுங்கள் அவர் உங்கள் வேதனையை மாற்றிடுவார் என்று ஒரு சொன்னார்கள் . இதை என் இயேசுவை தேடி சென்று கொண்டாள். நான் அவளை என் மனைவி இந்த சகோதரி என் மனைவிக்கு மனைவி கேட்டது முதல் ஆலயத்தில் அவரை தொழுது திட்டினேன் அடித்தேன் அதற்கு இயேசுவாகிலும் எனக்கு நன்மை செய்கிறாரா பார்ப்போம் என்று என்னிடம் சொல்லிவிட்டு என் மனைவி ஆலயத்திற்கு போனாள் என்ன ஆச்சரியம் பல சாமியார்கள் மூலம் குறி சொல்லுகிற வர்கள் மூலம், மந்திரவாதிகள் மூலம் என் மனைவியின் மேல் இருந்த அந்த ஆவியை விடுதலை செய்ய முடியவில்லை ஆனால் ஒரு ஜெபத்தில் என் மனைவியை பிடித்த அந்த அசுத்த ஆவி அவளை விட்டுப் போய்விட்டது. சரீரத்தில் சுகம் கிடைத்தது. மரித்து போக வேண்டிய என் மனைவி பிழைத்தாள். பிள்ளைகளை தேவன் கொடுத்தார் இப்பொழுது நாங்கள் தேவனுக்கு ழுழு நேரம் ஊழியம் செய்கிறோம் கர்த்தர் எங்களை ஆசீர்வதிக்கிறார். வாழ்க்கையில் சோர்ந்து வழி இல்லாமல் இருக்கும் உங்களையும் அவர் ஆசீர்வதிப்பார். ஆமென் எங்களுக்காகவும் எங்கள் ஊழியங்களுக்காகவும் ஜெபியுங்கள்