Artist
Bro. Lukas Seakar
Bro. லூக்காஸ் சேகர்
111 songs
பெயர்: பாஸ்டர் லூக்காஸ் சேகர்
பிறந்த தேதி: 17 பிப்ரவரி 1972
பிறந்த இடம்: ஒரத்தூர் கிராமம், அருகே அரக்கோணம், திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
தந்தை: திரு. லோகநாதன்
மனைவி: திருமதி விஜயராணி
மகன்: ஃபின்னி சார்ல்ஸ் டோனி (2002–2005)
மகள்: (2006-இல் பிறந்து, அதே ஆண்டில் இறந்தார்)
Testimony of Pastor Lucas Sekar
எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளியாகிய இயேசுகிறிஸ்து (கொரி.1:27,28 இன்படி பலவீனனும், எளியவனும், அற்பமாய் எண்ணப்பட்டவனாகிய எனக்குச் செய்த பெரிய நன்மைகளை உங்களுக்கு சாட்சியாக அறிவிப்பதில் மிகுந்த மனமகிழ்ச்சி அடைகிறேன்.
சென்னையிலுள்ள திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் அருகே ஓரத்தூர் கிராமத்தில் 1972 ஆம் ஆண்டு லோகநாதன் குடும்பத்தில் 4 ஆவது மகனாக பிறந்தேன். என் தகப்பனார் பாரம்பரியமிக்க இந்து குடும்பத்தைச் சார்ந்தவர். அதிகமாய் குடிக்கும் குடிப்பழக்கம் உடையவர். சம்பாதிக்கிற பணங்களைக் குடித்தே செலவழித்த காரணத்தினால் குடும்பம் மிகவும் வறுமைக்குள்ளானது. சாப்பிடுவதற்கே எந்த வழியுமில்லாமல் தங்குவதற்குக் கூட வீடு வாசலும் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டோம். இதிலும் என் நிலைமையோ மிகவும் பரிதாபம். 10 வயதில் வந்த கடுமையான போலியோ (Polio) ஜூரத்தினால் பாதிக்கப்பட்டு, வலது கால் சுகத்தை இழந்தேன். என்னை நேசிக்கவோ, பராமரிக்கவோ யாருமின்றி அனாதையாக, அகதியாக தள்ளப்பட்டேன். தெருக்களிலும், திண்ணைகளிலும் படுத்து உறங்கி சினிமா பாடல்களை பாடி, என் நாட்களை, வருடங்களைக் கடத்தினேன். 10 ஆம் வகுப்பு வரை பள்ளிக்குச் சென்று படித்ததே ஒரு வேளை உணவிற்காகத்தான்.
இந்நிலையில் 10 ஆம் வகுப்பு அரசுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் மொத்தம் 37 மதிப்பெண்கள் பெற்றேன். எந்த இடத்திற்கு நான் சென்றாலும் வேலை கிடைக்கவில்லை. யாரும் என்னை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. தரித்திரமே தலைதூக்கிய நிலையில் வாழ்வோ, சாவோ என்ற சூழ்நிலையில் வாழ வழியில்லாமல் சாவை நோக்கிச்சென்றேன். இரயிலில் விழுந்து தற்கொலை செய்து சாகப்போகிற நிலையில் வானத்தைப் பார்த்து, தெய்வம் ஒருவர் இருக்கிறாரா? உண்மை தெய்வம் யார்? என்று கதறி அழுதேன். உண்மை தெய்வமாகிய இயேசு என் சத்தத்தைக் கேட்டார். ஒரு ஆடு மேய்க்கும் சகோதரன் மூலம் இயேசு என்னோடு பேசி, என் வாழ்க்கைக்கு நம்பிக்கை கொடுத்தார். ஆலயத்திற்கு சென்று ஞானஸ்நானம் பெற்றேன். போதகர் ஒருவர், உனக்கு கொரியர் (Courier) அலுவலகத்தில் வேலை வாங்கித் தருகிறேன் என்றார்.எழுதவோ, படிக்கவோ தெரியாத நான் எப்படி வேலை செய்வது என்று திகைத்து அழுதேன்.
அந்த இரவிலே, தேவன் என்னோடு பேசி, என் ஊழியத்தை செய்ய வருவாயா? என்றார். படிப்பறிவு இல்லாதவன் ஊழியம் எப்படி செய்வது ? என்றேன். தேவன் என்னை நோக்கி, நீ என்னை பின்பற்றி வா! நான் உன்னை தேசத்தின் கடைமுனை மட்டும் கொண்டு போவேன் என்றார். விசுவாசத்தோடு தேவன் காட்டின இடமாகிய சென்னை ஆவடியை அடுத்த சுந்தரசோழபுரம் என்ற கிராமத்திற்கு வந்தேன். 1996-97 வருடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுகிற இடத்தில், வேப்பமரத்தின் அடியில் சிறு பிள்ளைகளுக்கு பாடல்களைப் பாடி இயேசுவைப் பற்றி அறிவித்தேன்.
நாளடைவில் அதில் சில பெரியவர்களும், கலந்து கொண்டனர். இந்நிலையில் அந்த ஊரில் இருந்த துன்மார்க்கர்கள் மிகவும் எதிர்த்தனர். அங்கும் பட்டினிதான். எப்படியோ தேவன் என்னை அனுதினமும் வழிநடத்தி வந்தார். இந்த கடினமான ஊழியத்தின் பாதையில் அதிகமாய் தேவனைத் துதிப்பதும், ஆராதிப்பதுமே என்னுடைய பிரதான வேலையாக இருந்தது. தேவன் அந்த நாட்களில் பல புதிய
பாடல்களைக் கொடுத்து என்னை உற்சாகப்படுத்தினார். 1998 ஆம் வருடத்தில் கூரை கொட்டகை ஒன்றை அமைத்து அதில் ஆராதனை நடத்தி வந்தேன். அந்த கொட்டகையை சிலர் எரித்து விட வேண்டுமென்று எனக்கு எதிராக வந்தனர். அந்த சமயத்தில், பட்டினி ஒரு பக்கம்... ஊழியத்தில் நெருக்கம் ஒரு பக்கம். ''இயேசுவே என்னால் முடிந்த ஊழியத்தை செய்து விட்டேன். என் ஜீவனை எடுத்துவிடும்" என்று அழுதேன். அப்போது தேவன் என்னோடு பேசி . ''பயப்படாதே, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் " (ஆகாய் 2:23) என்றார். பிறகு, 2000 ஆம் ஆண்டு சுந்தரசோழபுரத்தில் சுமார் 250 பேர் உட்காரக்கூடிய ஒரு சிறு ஆலயத்தை தேவன் தந்தார்.
பிறகு திருமணமாகி 2002 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி அழகான ஆண் பிள்ளையை தேவன் எனக்கு கொடுத்தார். அவனுக்கு பின்னி சார்லஸ் டோனி என்று பேரிட்டேன். மிகவும் அழகான அறிவுள்ளவன். பிள்ளை 2 ½ வயதில் திடீரென ஜூரம் வந்து குழந்தை இறந்து விட்டது. அந்த நேரத்திலும் தேவன் "என்னதான் ஆனால் என்ன?" பாடல் மூலம் என்னை பெலப்படுத்தினார். பிறகு 2006 ஆம் ஆண்டு மறுபடியும் ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. தேவனை நோக்கி, "என் தேவனே! என்னிடத்தில் குறையேதும் உண்டோ?'' என்று கண்ணீரோடு ஜெபித்தேன். அப்போது தேவன்."பயப்படாதே! பரிமள தைலம் குப்பியில் இருக்கிற வரை வீசாது. குப்பியையே உடைத்தேன்.உன்னைக் கொண்டு இலட்சங்களை, கோடிகளை ஆசீர்வதிப்பேன்'' என்றார். வாசனை
அதன்பிறகும் சத்துரு அதிகமாய் எங்களோடு யுத்தம் பண்ணினான். ஒரு நாள், ஊழியத்திற்கு செல்வதற்காக என் இருசக்கர வாகனத்தை வெளியே எடுக்கும்போது, கால் வழுக்கி கீழே விழுந்தேன். முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு, மூன்று விலகி கஷ்டப்பட்டேன். டிஸ்க் டாக்டர்கள் உங்களால் உட்காரவோ, படுக்கவோ முடியாது என்று சொன்னார்கள். அப்போதும் தேவன், ''உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும்'' என்ற வசனத்தைச் சொல்லி, என்னை உற்சாகப்படுத்தி, பாடலையும் கொடுத்து, பரிபூரண சுகத்தையும் கொடுத்தார்.
தேவன் எனக்கு கொடுத்த விலையேறப்பெற்ற பாடல்கள் எல்லாமே வேத வசனங்கள் உள்ளடங்கியவையே. படிப்பறிவு இல்லாத எனக்கு இந்த பாடல்களின் மூலம், ஆராதனை அபிஷேகத்தைக் கொடுத்து அநேக கோடிக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதமாக வைத்திருக்கிறார். எல்லா பாடல்களையும் தொகுத்து புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன். பாடி, தேவனை மகிமைப்படுத்துங்கள். தற்போது கர்த்தர் அடியேனுக்கு ஊழியத்தில் பல புதிய தரிசனங்களையும், திட்டங்களையும் கொடுத்திருக்கிறார். தேசங்களின் எழுப்புதலுக்காக 24 மணி நேரமும் துதி, ஆராதனை, ஜெபமுமாய் செயல்படக்கூடிய Revival Prayer Centre-க்காக, 8 ஏக்கர் நிலத்திற்காகவும் ஜெபித்துக் கொண்டு இருக்கிறோம். அதை சீக்கிரமாய் வாங்கவும், கட்டடம் கட்டவும் ஜெபியுங்கள்.
I was born in a strong orthodox Hindu family as forth child on 17th February 1972. We lived in small village named Oratthur near Arakonnam in Tamilnadu, India. My father was addicted to alcohol and he drank heavily. Because of his drinking habit all the family members were starving. We lost our dwelling hut too. As to add more chaos in our life at the age of 10 I was attacked by Polio virus and my right leg became lame. At this juncture my father and mother both died in a year. We were small kids and we didn’t know what to do next. After that I thought there was no use in me living.I better die. So one day I decided to end my life my jumping before a moving train. While I was going with this intension and nearing the railway track I met a man who was taking care of goats. He somehow understood what I was about to and told me.” Jesus Christ is the only true God and if you accept him in your life that he will give you life and there is no need to die in front of a train”. I replied to him,” if such a God is there let him help me now”. At the age of 15 I accepted Jesus Christ as my own personal savior.
I had a habit of singing sorrowful cinema songs to comfort me. But I decided thereafter to sing only devotional songs and I must write my own songs. I didn’t have much education but my desire was to write songs. So I started to pray. I asked God,” Lord thou art merciful and full of grace. Please give me the wisdom and knowledge to write songs to your praise”. There were only two things that I could claim of my own. There were a Bible and a bed sheet. The desire to serve God was forcing me to go out on the streets and tell about him. So I went village after village and distributed tracks about salvation through Christ.
One day I was led to a village called Sundera Cholapuram. That time this village was undeveloped and poor. Near this village there is a famous Hindu temple. All the villagers were idol worshipers. I started to tell them about Jesus. The villagers told me,” you look pity and we don’t want your God”. But I sang the songs that God gave me in my lips and the small children gathered around me. We sat under a tree and started telling them about Jesus Christ. Little by little the parents also started to come. The Lord touched their heart and a small church was formed. Together we built a hut which could accommodate 20 to 30 people. At the same time some villagers started to object our worship service and planned to set fire to the hut. By the grace of God their plan failed. But after some time due to heavy rains the hut was damaged beyond repair. I looked up to the Lord with tears. “Lord! Help me to build a solid building so that people can come and worship you without fear”. God answered my prayer and we were able to build a building accommodating 250 people. Little by little the church expanded and now about 250 people are attending our worship service on Sunday,
I wrote songs about God’s provisions and his care in my life and in the ministry. In 2001 I got married to Vijayarani and I was blessed with a baby boy the next year. We named him Finny Charles Dony. One of my son’s favorite hymns was” Whatever happens we don’t mind you are everything for me”. Our joy didn’t last long when my son was three years old he had fits and all the veins connecting to the brain got damaged and he died after being hospitalized for couple of days. With heavy heart we buried the child and I sang his favorite song at the time of burial.
Again after 2 years my wife conceived a delivered a baby girl but she too died after being in the world for two days. The lord Comforted us and we came out with full strength to serve our master.
By His grace I have released 7 albums to his glory.Whenever I face opposition and trouble in the ministry his wonder working power makes me to march forward. Now He takes me to different countries to praise His name. Many have shared how they were blessed by these songs. He is worthy to all praise, honor and glory.
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeUyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaUyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaUyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiUyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeUyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilUyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalUyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeUyarthuvaar
- ஆட்டுக்குட்டி ரத்தத்தை கையில் எடுப்போaattukkutti rathathai kaiyil eduppoUyarthuvaar
- ஆதரவே அடைக்கலமேaadharavae adaikkalamaeUyarthuvaar
- ஆதிமுதலாய் இருந்தவரும்aadhimudhalaay irundhavarumUyarthuvaar
- ஆராதனைக்குரியவரே தூய ஆவியானவரேaaraadhanaikkuriyavarae thooya aaviyaanavaraeUyarthuvaar
- இந்தியா இந்தியா இந்தியாindhiyaa indhiyaa indhiyaaUyarthuvaar
- இயேசு நாமமே ஜெய நாமமேyesu naamamae jeya naamamaeUyarthuvaar
- இயேசு ராஜாவோடு போக துணிந்துவிட்டேன்yesu raajaavodu poga thunindhuvittenUyarthuvaar
- இரைச்சலின் சத்தம் கேட்கணும்iraicchalin satham ketkanumUyarthuvaar
- உங்க கிருபை இல்லாம வாழ முடியாதய்யாunga kirubai illaama vaazha mudiyaadhayyaaUyarthuvaar
- உங்க வசனம் என் மனமகிழ்ச்சிunga vasanam en manamagizhcchiUyarthuvaar
- உண்மையாய் நேசிக்க யாரும் இல்லையேunmaiyaay nesikka yaarum illaiyaeUyarthuvaar
- உதவாதவன் என்று தள்ளியதே உலகம்udhavaadhavan endru thalliyadhae ulagamUyarthuvaar
- உந்தன் பாதம் பணிகின்றோம் இயேசுவேundhan paadham panigindrom yesuvaeUyarthuvaar
- உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே மகனேunakkedhiraana aayudhangal vaaykkaadhae maganaeUyarthuvaar
- உன்னத தேவ குமாரனே உம்மைத் துதிக்கிறோம்unnadha deva kumaaranae ummaith thudhikkiromUyarthuvaar
- உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்கunnadha devanukku magimai seluthungaUyarthuvaar
- உன்னத தேவன் என்னோடிருக்கunnadha devan ennodirukkaUyarthuvaar
- உமது சமூகம் வரும்போதல்லாம்umadhu samoogam varumbodhallaamUyarthuvaar
- உம் சமூகத்தை வாஞ்சிக்கிறேன்um samoogathai vaanjikkirenUyarthuvaar
- உம்மாலே தான் உயிர் வாழ்கிறேன்ummaalae thaan uyir vaazhgirenUyarthuvaar
- உம்மால் எல்லாம் நடக்குமேummaal ellaam nadakkumaeUyarthuvaar
- உம்மை உறுதியாய்ummai urudhiyaayUyarthuvaar
- உம்மை தான் நம்பி வாழ்கிறேன்ummai thaan nambi vaazhgirenUyarthuvaar
- உம்மை பாடாமல் என்னால்ummai paadaamal ennaalUyarthuvaar
- உம்மை விட்டு நான் எங்கே போவேன்ummai vittu naan engae povenUyarthuvaar
- உம்மைக் காணாமல் உள்ளம் வாடுதைய்யாummaik kaanaamal ullam vaadudhaiyyaaUyarthuvaar
- உம்மைப்போல ஒரு தெய்வமில்லைummaippola oru theyvamillaiUyarthuvaar
- உம்மைப்போல நல்ல தகப்பன்ummaippola nalla thagappanUyarthuvaar
- உயர்த்துவார் உயர்த்துவார்uyarthuvaar uyarthuvaarUyarthuvaar
- உருக்கமான இரக்கத்தாலேurukkamaana irakkathaalaeUyarthuvaar
- உலகத்தின் இரட்சகர்ulagathin iratsagarUyarthuvaar
- உலகமே போற்றுதைய்யா உந்தன் நாமத்தைulagamae potrudhaiyyaa undhan naamathaiUyarthuvaar
- உள்ளங்கால் தொடங்கிullangaal thodangiUyarthuvaar
- எங்களுக்கல்ல கர்த்தாவேengalukkalla karthaavaeUyarthuvaar
- என் கைகளை விரோதிகள்en kaigalai virodhigalUyarthuvaar
- என் தலையை உயர்த்துகின்றen thalaiyai uyarthugindraUyarthuvaar
- என் பெலனாகிய கர்த்தாவேen pelanaagiya karthaavaeUyarthuvaar
- என் மீட்பர் உயிரோடுண்டுen meetpar uyirodunduUyarthuvaar
- என் விசுவாச கப்பல்en visuvaasa kappalUyarthuvaar
- என்தலை தண்ணீரும் என் கண்கள் கண்ணீரும்endhalai thanneerum en kangal kanneerumUyarthuvaar
- என்னதான் ஆனாலென்ன என் மீட்பர்ennadhaan aanaalenna en meetparUyarthuvaar
- என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானேennai jenippithavarum neerdhaanaeUyarthuvaar
- என்னை நடத்திடும் தேவாennai nadathidum devaaUyarthuvaar
- எல்லா கனத்திற்கும்ellaa kanathirkumUyarthuvaar
- எல்லாமே நீர்தானய்யா எல்லாமே நீர்தானய்யாellaamae neerdhaanayyaa ellaamae neerdhaanayyaaUyarthuvaar
- எல்லோரும் வாருங்கள் ஒன்றாக கூடுங்கள்ellorum vaarungal ondraaga koodungalUyarthuvaar
- எல்ஷடாய் என்ற நாமம் உடையவர் எங்கள்elshadaay endra naamam udaiyavar engalUyarthuvaar
- எழுப்புதலை கொண்டு வாங்க பரிசுத்த ஆவியேezhuppudhalai kondu vaanga parisutha aaviyaeUyarthuvaar
- ஏகமாய் துதித்திடுவோம்egamaay thudhithiduvomUyarthuvaar
- ஒடுக்கினவன் ஒழிந்துபோனான்odukkinavan ozhindhubonaanUyarthuvaar
- ஒரு கோடி ஸ்தோத்திரங்கள்oru kodi sthothirangalUyarthuvaar
- ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலேoru nimisham kooda neer illaamalaeUyarthuvaar
- ஒரு வார்த்தை சொல்லும்oru vaarthai sollumUyarthuvaar
- கண்ணின் மணி போல உன்னை காத்திடுவேனேkannin mani pola unnai kaathiduvenaeUyarthuvaar
- கண்ணீரினால் பாதத்தைkanneerinaal paadhathaiUyarthuvaar
- கர்த்தருக்கு புதுப்பாட்டை பாடுங்கkartharukku pudhuppaattai paadungaUyarthuvaar
- காலையில் எழுந்து உம் துதிkaalaiyil ezhundhu um thudhiUyarthuvaar
- கிருபை மேல் கிருபை தாருமேkirubai mel kirubai thaarumaeUyarthuvaar
- கொடியவன் அற்றுப்போனானேkodiyavan atrupponaanaeUyarthuvaar
- சத்துரு விழுந்தானேsathuru vizhundhaanaeUyarthuvaar
- சமாதான பிரபுவேsamaadhaana pirabuvaeUyarthuvaar
- சேனைகளின் தேவனே உமது வாசஸ்தலம்senaigalin devanae umadhu vaasasthalamUyarthuvaar
- சோர்ந்ததையா என் உள்ளம்sorndhadhaiyaa en ullamUyarthuvaar
- ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசுjeyithaarae jeyithaarae yesuUyarthuvaar
- ஜோரா கைய தட்டி பாடுங்கjoraa kaiya thatti paadungaUyarthuvaar
- தனிமை அல்ல இனிthanimai alla iniUyarthuvaar
- தலை நிமிர்ந்து நடக்க செய்தாரேthalai nimirndhu nadakka seydhaaraeUyarthuvaar
- தள்ளாடி போகின்றார்thallaadi pogindraarUyarthuvaar
- தாய் உன்னை மறந்தாரோthaay unnai marandhaaroUyarthuvaar
- துதிக்க துதிக்க இன்பம் பெருகுதேthudhikka thudhikka inbam perugudhaeUyarthuvaar
- துதிபலிய செலுத்த வந்தோம் இயேசய்யாthudhibaliya selutha vandhom iyesayyaaUyarthuvaar
- துதிபலியை செலுத்தthudhibaliyai seluthaUyarthuvaar
- தூங்காமல் உறங்காமல்thoongaamal urangaamalUyarthuvaar
- தேசத்தை சுதந்தரிக்க புறப்படு மகனேthesathai sudhandharikka purappadu maganaeUyarthuvaar
- நம்மேலே கிருபை வைத்துnammelae kirubai vaithuUyarthuvaar
- நல்ல தகப்பன் நீர்nalla thagappan neerUyarthuvaar
- நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசைய்யாnaan udaindha sidhaindha paathiram iyesaiyyaaUyarthuvaar
- நான் பாடி மகிழும் நேரம் ஆராதனை நேரம்naan paadi magizhum neram aaraadhanai neramUyarthuvaar
- நீ என்னால் மறக்கப்படுவதில்லைnee ennaal marakkappaduvadhillaiUyarthuvaar
- நீ எழும்பும் வரையிலும்nee ezhumbum varaiyilumUyarthuvaar
- நீர் திறந்தால் அடைப்பவன் இல்லைneer thirandhaal adaippavan illaiUyarthuvaar
- நீர் பார்த்தால் போதும்neer paarthaal podhumUyarthuvaar
- நீர் மாத்திரம் இல்லையென்றால்neer maathiram illaiyendraalUyarthuvaar
- நீர் வந்தாலே போதுமையாneer vandhaalae podhumaiyaaUyarthuvaar
- பயப்படாதே பயப்படாதேpayappadaadhae payappadaadhaeUyarthuvaar
- பரலோக தந்தையே பரலோக தந்தையேparaloga thandhaiyae paraloga thandhaiyaeUyarthuvaar
- பறக்குது பறக்குது சிலுவை கொடிparakkudhu parakkudhu siluvai kodiUyarthuvaar
- பாதம் பணிகின்றோம் உந்தன்paadham panigindrom undhanUyarthuvaar
- பாரம் இல்லையா பாரம்paaram illaiyaa paaramUyarthuvaar
- பாலைவனமாய் இருந்த எங்களpaalaivanamaay irundha engalaUyarthuvaar
- பாவம் போக்கும் நதி ஜீவ தேவ நதிpaavam pokkum nadhi jeeva deva nadhiUyarthuvaar
- பேசுங்கப்பா எங்களொடு பேசுங்கப்பாpesungappaa engalodu pesungappaaUyarthuvaar