உம்மைப்போல ஒரு தெய்வமில்லை
ummaippola oru theyvamillai
உம்மைப்போல ஒரு தெய்வமில்லை ஐயா இயேசையா பாவிகளை இரட்சிக்க வந்தவரே
மன இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமுள்ளவரே (2)
1 ஒருவரும் கெட்டுப்போவது சித்தமில்லையென்று சொல்லி பரலோக மேன்மையை விட்டு பூமியில் வந்தீரையா (2) நிந்தைகளும் பாடுகளும் எங்களுக்காய் ஏற்றீரே (2) நித்தியஜீவன் தந்தீர் ஐயா உம்மைப்போல் யாருமில்லை (2)
2.குஷ்டரோகிமேல் மனதுருகி கூசாமல் தொட்டீரையா கஷ்டப்படுவோர் பாரங்கள் நீங்கி ஆறுதல் தந்தீரையா (2) வானிலும் பூமியிலும் மேலான நாமமுள்ளவர் (2) இந்த பூமியில் இரத்தம் சிந்தி மனுக்குலத்தை மீட்டவரே (2)
3. எப்பேர்ப்பட்ட பாவியையும் மன்னிக்கும் தேவனிவர் பாவங்களை பாராமலே நேசிக்கும் தேவனிவர் (2) மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ (2) அத்தனை பாவங்களை அவர் மன்னித்து வாழவைப்பார் (2)
4. உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும் மனிதன் பிரிக்கிறான் சிலர் பட்டம் பதவி செல்வங்களினால் பெருமை கொள்கிறான் (2) ஜீவன் போனால் ஒன்றுமில்லை கூட ஒன்றும் வருவதில்லை (2) இதை உணர்ந்து வா என் இயேசுவை தவிர வழியில்லை (2)
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar