அன்பின் கயிறினால் கட்டி
anbin kayirinaal katti
அன்பின் கயிறினால் கட்டி இழுத்துக்கொள்ளுமே (2) சித்தத்தின் மையத்தில் என்னையும் வைத்து கொள்ளுமே இந்த உலகம் வேண்டாமே மாயை லோகை வெறுக்கிறேன் உந்தன் கையிலே தந்து விட்டேன் என்னை வனைந்திடும் தெய்வமே -ஓஹோ ஓஹோ
1. மாம்சத்தின் சிந்தை மரணம் என்றுணர்ந்தேன் ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமாம் (2) தூய ஆவியால் நிரப்புமே எந்தன் பாதையின் வெளிச்சமே எந்தன் ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடியே முடித்திட கிருபை தாருமே - ஓஹோ ஓஹோ
2. கிறிஸ்துவின் சிந்தையால் என்னையும் நிரப்பிடுமே உந்தன் மகிமையால் காலூன்றி நிற்க செய்யும் (2) தேவ ராஜ்யம் பெலத்துடன் என் மேலே இறங்கட்டும் உந்தன் மகிமையின் சுவிசேஷம் நானும் தீவிரமாய் அறிவிக்க கிருபை தாருமே-ஓஹோ ஓஹோ
3. கொடிய காலங்கள் பூமியை நெருங்கிடுதே தேவனின் கோபத்தால் பற்றி எரியப்போகுதே (2) கோடி அழிந்திடும் ஜனங்களை (இ தீவிரமாய் மீட்டிட திறப்பிலே நின்று நான் தினம் கதறியே ஜெபித்திட கிருபை தாருமே -ஓஹோ
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- ஆட்டுக்குட்டி ரத்தத்தை கையில் எடுப்போaattukkutti rathathai kaiyil eduppoBro. Lukas Seakar · Uyarthuvaar