உம்மை பாடாமல் என்னால்
ummai paadaamal ennaal
உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாதையா உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா – 2 அன்பு தெய்வமே நேச தெய்வமே – 2 இயேசையா என் இயேசையா
எளிமையானவன் சிறுமையானவன் தண்ணீரை தேடி தாகத்தாலே நாவறண்டு போனேனே என்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே – 2 (என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே – 2
1. மனுஷர் பாக்கிறவண்ணமாய் நீர் பார்ப்பதே இல்லை பட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லை யாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லை புழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரே பெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே – 2
உம் அன்பிற்கு ஈடு இணை இல்லையப்பா உம் இரக்கத்தற்கு முடிவேதான் இல்லையப்பா – 2
2. ஏழைகளின் பெலனெல்லாம் நீர்தானையா எளியவனுக்கு திடன் எல்லாம் நீர்தானையா சிறுமைப்பட்டவனின் நம்பிக்கையெல்லாம் நீர்தானையா திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் நீரே உம்மை நம்புகிற யாவரையும் நீர் கைவிடவேமாட்டீர் – 2
ஒரு தாயை போல தேற்றுகின்ற தெய்வம் நீரே தகப்பனை போல சுமக்கின்ற தெய்வம் நீரே – 2
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar