நம்மேலே கிருபை வைத்து
nammelae kirubai vaithu
நம்மேலே கிருபை வைத்து அழைத்து வந்தாரே உருக்கமான இரக்கத்தாலே கரம்பிடித்தாரே -2 தடைகள் விலகுமே வழிகள் திறக்குமே அற்புதங்கள் அடையாளம் என்றும் நடக்குமே -2
அலைகளை அடிப்பார் தலைகளை உடைப்பார் இடுக்கமென்னும் சமுத்திரத்தை கடந்து செல்வோமே பாடிடுவோமே துதித்திடுவோமே வாக்குத்தத்த தேசத்தை சுதந்தரிப்போமே
1. கர்த்தரைப் புகழ்ந்து பாடிடுவோமே மகிமையாய் வெற்றியைத் தந்துவிட்டாரே குதிரை வீரரைக் கடலில் தள்ளினார் கர்த்தரின் வலக்கரம் நொறுக்கி விட்டதே ஆழி அவர்களை மூடிக்கொண்டதே கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துப்போனாரே -2
2.நாசியின் சுவாசத்தால் ஜலம் குவிந்து நின்றதே வெள்ளங்கள் குவியலாக நிமிர்ந்து நின்றதே ஆழத்தில் தமது ஜனத்தை நடத்தி சென்றாரே தரையிலே ஜனங்களெல்லாம் கடந்து போனாரே இன்று காண்கிற எகிப்தியரெல்லாம் (சத்துருக்களெல்லாம்) ஒருபோதும் என்றுமே காண்பதேயில்லை -2
3. தேவர்களில் உமக்கு நிகரானவர் பூமி முழுவதும் யாருமில்லையே பிரமிக்க அற்புதம் செய்யத்தக்கவர் சர்வலோகத்திலும் யாருமில்லையே சர்வ பூமிக்கும் ஆண்டவர் நீரே முழங்கால்கள் யாவுமே என்றும் முடங்குமே
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar