நீ என்னால் மறக்கப்படுவதில்லை
nee ennaal marakkappaduvadhillai
நீ என்னால் மறக்கப்படுவதில்லை உன்னை என்றும் கைவிடவே மாட்டேன் உள்ளங்கையில் உன்னை வரைந்தேனே எந்தன் கையில் இராஜ முடி நீயே எந்தன் கரத்தில் அலங்கார கிரீடம்
என் சீயோனே சீயோனே உன்னை மறப்பேனோ மறப்பதில்லை-2 என் கையில் இருந்து ஒருவனும் உன்னை பறிக்கவிடமாட்டேன் தீங்கு செய்ய ஒருவனும் உன்மேல் கை போடுவதில்லை-2
1. கர்த்தர் என்னை கைவிட்டார் ஆண்டவர் மறந்துவிட்டார் என்று புலம்பி சொல்லுகின்ற சீயோனே-2 தாயானவள் பிள்ளைக்கு இரங்காமல் பாலகனை மறப்பாளோ அவள் மறந்து போனாலும் நான் உன்னை மறப்பதில்லை சீயோனே நான் உன்னை வெறுப்பதில்லை சீயோனே - என் சீயோனே
2. நிர்மூலமாக்கினவர் பாழாக்கினவரெல்லாம் உன்னை விட்டு புறப்பட செய்வேன் சீயோனே-2 வனாந்திரம் எல்லாமே வயல்வெளியாய் மாறிடுமே பாழான தேசமெல்லாம் குடிகளாலே நிரம்பிடுமே உன்னை என்றும் வெறுத்திடமாட்டேன் சீயோனே-2 - என் சீயோனே
3. எழும்பு எழும்பு சீயோனே வல்லமையை தரித்துக்கொள் தூசியை உதறிவிட்டு எழும்பிடு-2 அலங்கார வஸ்திரத்தை உடுத்திக்கொள் சீயோனே உன் இராஜா நடுவினிலே எப்போதும் இருக்கையிலே இனி நீ தீங்கை காண்பதில்லையே-2 - என் சீயோனே
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar