Skip to content
TCW Songs

Artist

Pr. S. Chandrasekaran

Pr. S. சந்திரசேகரன்

96 songs

என் அன்புக்குரியவர்களே நாங்கள் இந்தியா சென்றிருந்த போது எனது சகோதரன் டேவிட் என்னிடம் சொன்னா குறிப்பிட்ட ஒரு சகோதரி தன் வீட்டில் யூதாவின் செங்கோல் பாடல்களை கேட்டு கொண்டிருந்த பொழுது அந்த சகோதரிக்குள் இருந்த அசுத்த ஆவி வெளியேறியதாக கூறினார் அதுபோல் குவைத்து தேசத்தில் வாழ்ந்து கொண்டிருந்த சகோதரி மங்கை கரிசி கண்ணீரோடு தொலைபேசியின் மூலமாய் என்னோடு இவ்விதமாய் பேசினார் பாஸ்டர் நான் ஒரு இந்து சகோதரி என் கணவர் நிமித்தம் என் உள்ளம் உடைந்து மரித்து போகலாம் என்று இருந்தேன். என் நண்பர் மூலம் உங்கள் பாடல்களை கேட்டேன். அப்பொழுது எனக்குள் விவரிக்க முடியாத ஒரு புதிய சமாதானமும் நம்பிக்கையும் வந்தது. இப்பொழுதே நான் உங்கள் இயேசுவை ஆண்டவராக ஏற்றுக் கொள்கிறேன். எப்படி இந்த இயேசுவை பின்பற்ற வேண்டும் என்று கண்ணீரோடு என்னிடம் பேசினார். ஆம் பிரியமானவர்களே இன்றைக்கும் நமது ஆண்டவருடைய வல்லமைகள் குன்றி குறைந்து போகவில்லை அவருடைய உயிர்தெழுதலின் மகிமை இன்றைக்கும் நம் மத்தியிலே அசைவாடி கொண்டிருக்கிறது. நமது ஆண்டவர் சொன்னார் நான் மரித்தேன் ஆனாலும் இதோ சதா காலங்களிலும் உங்களோடு இருக்கிறேன் என்று சொன்னார் இந்த பாடல்களை நீங்களும் பயத்தோடும் பக்தியோடும் கேட்பீர்களானால் உங்கள் வாழ்க்கையில் உள்ள கவலை கண்ணீர் வியாதி வறுமை அனைத்தையும் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நீக்கி உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென் இாடல்களை கேட்ட உங்கள் அனைவரையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக.