Skip to content
TCW Songs

Artist

Pr. Ambur Johnraj

Pr. ஆம்பூர் ஜான்ராஜ்

131 songs

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். கர்த்தருடைய தயவினாலும், கிருபையினாலும் 'இயேசுவே உம்மோடு நானிருந்தால்' என்ற தலைப்பில் பாடல்களையும், இன்னிசையில் நற்செய்தி வழியாக கதாகாலட்ஷேபங்களையும், ஒலி நாடாக்களாக வெளியிட்டு வருகிறோம். சபை ஊழியங்களையும், நற்செய்தி ஊழியங்களையும். ஒலி நாடாக்கள் ஊழியங்களையும், செய்து வருகின்ற நான் பரம்பரையிலேயே கிறிஸ்தவன் அல்ல. ஒரு இந்து மந்திரவாதியின் மகனாக பிறந்த என்னை, விக்கிர ஆராதனைக்காரனாகவும், பாவியாகவும் வாழ்ந்த என்னை கர்த்தர் 1972ம் வருடம் இரட்சித்தார். 1977ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்து, எனக்கு கிடைத்த அரசாங்க வேலையை விட்டு விட்டு. தேவன் தமது கிருபையால் கொடுத்த இந்த கனமான ஊழியத்தை. அவர் அழைத்த அழைப்பின் பேரில் ஆம்பூரிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் மற்றும் அநேக இடங்களிலும் செய்து வருகிறேன். ஒலி நாடாக்கள் வழியாகவும், புத்தகம் வழியாகவும், பத்திரிக்கை வழியாகவும், வானொலி வழியாகவும், தொலைக்காட்சி வழியாகவும், செய்திகளும், பாடல்களும் வெளிவர ஜெபியுங்கள். பரிசுத்த ஆவியானவர் எனக்குத் தந்த பாடும் கிருபைகளைக் கொண்டு, நான் பாடியிருக்கிறது போல நீங்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியினால் நிறைந்து பாடவேண்டும் என்றும் உங்கள் பாடல் தொனியினால் அகிலத்தை நிரப்ப வேண்டும் என்றும் வாஞ்சிக்கிறேன். எங்கள் சமாதான பிரபு அனைத்து சபை ஊழியங்களுக்காகவும், ஜெபிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தேவ கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக!