சத்தாய் நிஷ்களமாயொரு சாமிய
sathaay nishkalamaayoru saamiya
1. சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய மும்இலதாய் சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே, எத்தால் நானடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்து அத்தா உன்னையல்லால் எனக்கார் துணையாருறவே?
2. எம்மா விக்குருகி உயிரீந்த புரத்ததற்கோர் கைம்மாறுண்டுகொலோ? கடைகாறுங்கையடைவாய், சும்மாரசணைசெய், சொல் சுந்தரம் யாதுமிலேன், அம்மான், உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே?
3. திரைசேர் வெம்பவமாம் கடல் முழ்கிய தீயரெமைக் கரசேர்ந்துய்க்க வென்றே புணையாயினை கண்ணிலியான், பரசேன் பற்றுகிலேன், என்னைப் பற்றிய பற்றுவிட்டாய், அரசே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே?
4. தாயே, தந்தைதமர் குருசம்பத்து நட்பெவையும் நீயே எம்பெருமான், கதிவேறிலை நிண்ணயங்காண். “ஏயே“ என்றிகழும் உலகோடெனக் கென்னுரிமை? ஆயே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே?
5. பித்தேறிச்சுழலும் ஜெகப் பேய்பிடித் துப்பவத்தே செத்தேன், உன்னருளால் பிழைத்தேன்மறு ஜென்மமதாய். எத்தோஷங்களையும் பொறுத்தென்றும் இரங்குகவென்று அத்தா, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே?
6. துப்பார் சிந்தையிலேன் மறைந்தீட்டிய தொல்வினையும் தப்பாதேவெளி யாநடுநாளெனைத் தாங்கிக் கொள்ள, இப்பாருய்யவென்றே மனுக்கோலமெடுத்த எங்கள் அப்பா, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே?
7.ஈண்டே யென்னுள்ளத்தில் விசுவாச விளக்கிலங்கத் தூண்டா யென்னிலந்தோ மயல் சூழ்ந்து கெடுத்திடுங்காண் மாண்டா யெம் பிழைக்காய் உயிர்த்தாயெமை வாழ்விக்கவே ஆண்டா யுன்னை யல்லாலெனக்கார் துணை யாருறவே?
8.மையார் கண்ணிருண்டு செவி வாயடைத்துக் குழறி ஐயால் மூச்சொடுங்கி உயிராக்கை விட்டே கிடும்நாள் நையேல் கை வெகிவேனுனை நாணுண் பஞ்சலென ஐயா உன்னையல்லா லெனக்கார் துணை யாருறவே?
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E G#m A F#m A F#m B A E B E E G#m A F#m B A E B G#m E E G#m A F#m A F#m B A E B E E G#m A F#m B A E B G#m E E G#m A F#m A F#m B A E B E E G#m A F#m B A E B G#m E
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal