அடைக்கலம் அடைக்கலமே
adaikkalam adaikkalamae
அடைக்கலம் அடைக்கலமே, இயேசு நாதா, உன் அடைக்கலம் அடைக்கலமே!
திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு - அடைக்கலம்
1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே, அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே; மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே தோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! - அடைக்கலம்
2. சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும் நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும்; பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே! - அடைக்கலம்
3. என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன் என்று சொன்ன வாக்கதனில் எனக்கும் பங்கில்லையோ அன்றுனது பக்கமதில் ஆகியிருந்த கள்ளனுக்கு இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தா யல்லவோ? - அடைக்கலம்
4. கட்டுப்படாக் காயமதின் கெட்டரணம் போலவே மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்; கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே, கிட்டிவந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே! - அடைக்கலம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal
- அந்தகாரப் பூமிandhagaarap poomiKeerthanaigal