அந்த நாள் பாக்கிய
andha naal paakkiya
அந்த நாள் பாக்கிய நாள் - நான் மீட்கப்பட்ட அந்த நாள் பாக்கிய நாள்.
அந்த நாள் ஆனந்த நாள், அருமை இரட்சகரென்னை அன்போடழைத்தெனது அசுத்தங்கள் நீக்கின நாள் - அந்த
1. அன்றே எனக்குப் போதித்தார், - அவர் வழியில் அநுதினம் செல்லக் கற்பித்தார்; என்றும் அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்ய ஏவினார் என் இரட்சகர், எங்கும் எடுத்துரைப்பேனே - அந்த
2. என்றனை அன்றே இழுத்தார் - தமதன்பினால் இசைவாய்த் தம்முடன் இணைத்தார்; சொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் எனக்கு, இந்த உறுதிபண்ணி இனிய ஐக்கியம் பெற்றேன் - அந்த
3. ஆறுதல்களால் நிறைந்தேன், - அளவில்லாத ஆசிகளினால் மகிழ்ந்தேன்; தாறுமாறான உள்ளம் மாறுதலை யடைந்து மாறாத யேசுவினில் மகிமையாய்த் தங்கப் பெற்றேன் - அந்த
4. அந்நாளில் வாக்குப் பண்ணினேன், - உறுதியாக எந்நாளும் நான் புதிப்பிப்பேன்; சொன்ன இவ்வாக்கை நிதம், சுத்தமாய் நிறைவேற்ற உன்னத பலம் தாராய், என்னையாட்கொண்ட தேவா - அந்த
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்தகாரப் பூமிandhagaarap poomiKeerthanaigal