அதிகாலையிலுமைத் தேடுவேன்
adhigaalaiyilumaith theduven
அதிகாலை யிலுமைத் தேடுவேன் முழு மனதாலே; - தே வாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே.
இது காறும் காத்த தந்தை நீரே; இனி மேலும் காத்தருள் செய்வீரே, பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே, பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் தேவே! - அதி
1. போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! - எப் போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா! ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா? எனக்கான ஈசனே! வான ராசனே! இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! - அதி
2. பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது, - தப் பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது, விலகாது என் சமுகம் என்ற வாக்கில் தவறேது? விசுவாசங்கொண்டு மெய்ப் பாசமூண்டிட, விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? - அதி
3. நரர்யாவர்க்குமுற்ற நண்பனாய் நடந்திட வையே! - தீ நாவின் பாவமற நன்மைகள் பொழிந்திடச் செய்யே! பரலோக ஆவியைநல் மாரி போலெனிலே பெய்யே! புகழார நாதனே! வேத போதனே! பூரணமாய் உனைப் போற்றுவேன், தினந் தினம் மெய்யே! - அதி
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal
- அந்தகாரப் பூமிandhagaarap poomiKeerthanaigal