அஞ்சாதே இயேச
anjaadhae iyesa
அஞ்சாதே, இயேசு ரட்சகர் ஆத்துமத்துயர் நீக்க வல்லவர்
வஞ்சமே மிஞ்சுமா பஞ்சபாதகன் நானென்று - அஞ்
1. வெள்ளிக் காசொன்றை இழந்து விட்டவள் வீட்டைப் பெருக்கிப் பார்த் தெடுத்தபின், துள்ளிப் பூரிக்கும் போல் உன்மேலே, தூதர் சங்கமும் களிப்பதாலே - அஞ்
2. மேய்ப்பன் மந்தையை விலகின ஆட்டை வெகு கவலையாய்த் தேடிக் கண்டபின், வாய்ப்புடன் மனம் மகிழும் போலே, மானுவேலுனைத் தழுவலாலே - அஞ்
3. தொண்ணூற் றொன்பது நீதியரிலுந் துயரடை பாவி யொருவன் மீதினில் எண்ணருந் தூதர் மகிழ்வதாலே இரட்சிப் புனக்குப் பலித்ததாலே - அஞ்
4. திருடன் ஒருவன் மரிக்கும் வேளையில் திருச்சுதன் பதம் தழுவிக் கதிக் - கு அருள் பெற்றான், என வேதஞ் சொல்வதை ஆய்ந்து மனஞ் சாய்ந்து நீ செல் - அஞ்
5. மரணத்தின் கூரை ஒடித்த வல்லவன் வருந்தி அழைத்த விருந்துக்கு வரத் தருணம் ஈதெனத் தாசர்கூடிச் சாற்றும் மொழியை எற்று நீவர - அஞ்
More from Keerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal
- அந்தகாரப் பூமிandhagaarap poomiKeerthanaigal