ஜென்மமார் கருவிலே
jenmamaar karuvilae
1. ஜென்மமார் கருவிலே வினைவிடம் தீண்டலால் நன்மனோ தத்துவ நாசமாயினவெலாந் தின்மையே செயவருந் திறனுளேன்,சிறியவோர் நன்மையே னுஞ்செயத் திறனிலேன், நவையினேன்.
2. நான் பிறந் ததுமுயிர்ச் சுமையினானலியவோ கான்பிறங் கலினுறுங் கதழ்விடப்பாந்தளில் ஊன்பிறங் குடல்வளர்த் தழலுவேன், உணர்விலேன், ஏன்பிறந் தேன்கொலாம் ஏழையிவ்வுலகினே?
3. அன்னையாய் அப்பனாய் அன்றதொட்டின்றுமட்-டு என்னையாய் பொடுபுரந் தென்றுநன்றேதரும் தன்னையே நிகர்வதோர் தம்பிரான் தயைமறந்-து என்னையே முப்பகைக் கீடழித் தனைகுவேன்.
4.ஓரணுத் துணையுநல் லுணர்விலேன் உலகுசெய் கோரணிக் குளமுடைந் திடையுமோர் கோழையான், ஆரணத் துரைபடிந் தயர்வுயிர்த் திலனினி மாரணக் கடல் குளித் தயர்வனோ மதியிலேன்?
5.எப்பெரும் பதகரும் இதயநொந் தேங்கிவந்-து அப்பனே பிழைபொறுத் தருளு மென்றடையிலோர் ஒப்பரும் புதல்வனுக் குருகிமன்னிப்பமென்று இப்பெருஞ் சுருதிதந் திறைமறந் திடுவரோ?
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal