யேசுவை அன்றி
yesuvai andri
யேசுவை அன்றி வேறொரு ரட்சகர் காசினி தனிலுண்டோ, மனமே? - அவர் நேசமறிந்து விசுவாசம் இல்லாமலே, மோசம் போவதேன், மனமே?
1.ஆதம் ஏவை செய்த பாதகம் தொலைந்திடப் பூதலம் வந்ததார், மனமே? - கொடும் யூதர்களால் பல வாதைகள் கொண்டு திவ்ய போதகம் செய்ததார், மனமே? - யேசு
2.இந்த வாழ்வு கன நிந்தை என்றுனது சிந்தை தெளிந்திருந்தும், மனமே - ஐயோ! பந்த பாசமதில் நொந்து நாள் தோறும் அலைந்து திரிவதேன், மனமே? - யேசு
3.பூதல மீதினில் ஓதரி தாம் பரஞ் சோதியைப் போற்றிசெய் மனமே; - செய்தால், பாதகம் போய் மோட்ச சாதகம் ஆமென்று வேதமுரைக்கு தல்லோ மனமே? - யேசு
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal