யேசுவே திருச்சபை
yesuvae thirucchabai
யேசுவே திருச்சபை ஆலயத்தின் என்றும் நிலைக்கும் மூலைக்கல்.
பேசற் கரிய மூலைக்கல் அவர், பெரும் மாளிகையைத் தாங்கும் கல். - யேசுவே
1.ஆகாததென்று வீடு கட்டுவோர் அவமதித்திட்ட இந்தக் கல்; வாகாய் ஆலய மூலைக் கமைந்து வடிவாய்த் தலைக்கல்லான கல். - யேசுவே
2.ஆலயமெல்லாம் இசைவாய் இணைக்கும் அதிசயமான அன்பின் கல்; ஞாலத்துப் பல பேதைகள் தமை நட்புற ஒன்றாய்ச் சேர்க்கும் கல். - யேசுவே
3.ஒப்பில்லா அரும் மாட்சிமை யுறும் உன்னத விலைபெற்ற கல்; எப்போதும் பரஞ்சோதியாய் நீதி இலங்கும் சூரியனான கல். - யேசுவே
4.காற்றுக்கும் கன மழைக்கும் அசையா கடிய மாபலமான கல்; மாற்றிக் கலியை ஆற்றித் துயரைத் தேற்றிச் சபையைக் காக்குங் கல். - யேசுவே
5.என்றும் கட்டுவோம் இந்த ஆலயத்தை, எழிலுறவே இக் கல்லின்மேல்; நன்றாய் இக்கல்லில் நம்பிக்கை வைப்போன் நாணம் அடையான் மெய்தானே. - யேசுவே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal