யேசு ராசா
yesu raasaa
யேசு ராசா - எனை - ஆளும் நேசா!
1 மாசிலா மணி ஆன முச்சுடர் மேசியா அரசே, - மனு வேலே, மாமறை நூலே தேவ செங் கோலே, இங்கெனின் மேலே அன்பு செய் - யேசு
2 தாவீ தரசன் மைந்தா, - நின் சரணம், சரணம் எந்தா! - சதா னந்தா வா னந்தா, உ வந்தாள்; மிக வந்தனம், வந்தனம்! - யேசு
3 ஐயா, என் மனம் ஆற்றி, - உன தடிமை என்றெனைத் தேற்றிக் - குண மாக்கி, வினை நீக்கிக், கை தூக்கி, மெய்ப் பாக்கியம் கொடு - யேசு
4 சுத்த திரித்துவ வஸ்துவே - சுவி சேட மகத்துவ கிறிஸ்துவே, - பரி சுத்தனே, கரி சித்தெனை இரட்சித் தடிமைகொள்; நித்தியம் தோத்திரம்! - யேசு
5 மங்களம் ஈசாவே - வளம் மிகும் சங்கையின் ராசாவே, - நரர் வாழ்வே, மன்னாவே, மெய்த் தேவே, உமக் கோசன்னாவே - யேசு
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal