இயேசு நான் நிற்கும்
yesu naan nirkum
இயேசு நான் நிற்குங் கன்மலையே! - மற்ற எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே.
1.இயேசுவின் நாமத்தின் மேலே - என்றன் எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே; நேசனையுங் கூட நம்பேன், - நான் இயேசு நாமத்தின் மேல் முழுதுமே சார்வேன். - இயேசு
2.இருள் அவர் அருள் முகம் மறைக்க, - நான் உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன்; உரமாகக் கடும்புயல் வீச, - சற்றும் உலையாத எனது நங்கூரமாம் அவரே. - இயேசு
3.பெரு வெள்ளம், பிரவாகம் வரினும் - அவர் பிரிதிக்னை, ஆணை, இரத்தம் என் காவல்; இருதயத்தின் நிலை அசைய - அப்போ தேசுவே என் முழு நம்பிக்கையாமே. - இயேசு
4.சோதியாய் அவர் வரும்போது - நான் சுத்தனாய்த் தரிசித்தே அவரைப் போலாவேன்; நீதியாம் ஆடை தரிப்பேன், - சதா நித்திய காலமாய் ஆளுகை செய்வேன். - இயேசு
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal