இயேசு நாமமல்லாமல்
yesu naamamallaamal
இயேசு நாமமல்லாமல் - உலகினில் வேறு நாமம் இல்லை - கிறிஸ்து.
தேசுலாவிய கேருபீம்பணி திவ்ய வானவர் முனிவர் கண்மணி, மாசில்லாத மெய்ஞ்ஞான சிகாமணி, மதிக்கும் சத்திய வேத சிரோமணி, - இயேசு
1.வானமும் புவியும் - கதி ரோன் மதி உடுவும் கானல் வரை கடலும் - நர ரான எவ்வுயிரும் தானே படைத்தருள் ஆதி காரணன், சர்வ ஜீவ தயாபரா பூரணன், ஈனர் வாக்குக் கெட்டாத மெய்யாரணன், இலங்கும் வேத சங்கீத பாராயணன். - இயேசு
2.காவிலாத மேவை - செய் தீவினையதனால் பூவின் மாந்தர் படும் - துயர் தேவ கோபமற, பாவிகளைப் பரனோடுற வாக்கப், பரம எருசலேம் நகர் சேர்க்க, மேவுமலகை அரணைத் தூளாக்க, மேதினியில் சமாதானம் உண்டாக்க, - இயேசு
3.பண்டு வேதியர்கள் - கைக் கொண்ட மாமறையில் விண்ட நாமமல்லாமல், - உயர் அண்ட மீதினிலும், மண்டலத்திலும், ஆழி கீழிலும், மாருதம் செலும் அட்ட திக்கிலும், தொண்டர் கூக்குரல் எட்டும் தூரத்திலும், துட்டர் வர விரும்பாத இடத்திலும், - இயேசு
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal