விசுவாசத்தால் நீதிமான்
visuvaasathaal needhimaan
விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்; - மெய் விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்.
1.நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர்; - முழு விஷமான பாவத்தினால் இறந்தோர். - விசு
2.உய்யும் வகையறியோம்; பெலனேயில்லை; - நரர் செய்யும் கிரியைகளில் நலனேயில்லை. - விசு
3.பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம்; - எச் சாபம் அழிவினுக்கும் தகைமை யுற்றோம். - விசு
4.தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும்; - அவர் மாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும். - விசு
5.நீதிமானைக் குற்றஞ்சாட்ட யாராலேயாகும்? - அவன் பாதகம் பழிமரணம், யாவுமே போகும். - விசு
6.தேவனின் பிள்ளை நானென்றே அவன் துள்ளுவான்; - தீய பாவ வழிதனைப் பகைத்தே தள்ளுவான். - விசு
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal