விரும்பாதே மனமே
virumbaadhae manamae
விரும்பாதே மனமே, உலக வாழ்வை விரும்பாதே மனமே பதவி என
தரம் பெரும் சுகம் எனத்தரையின் செல்வமதைக் கரும்ப தாக எண்ணிக் காதல் மிஞ்சி அதை - விரும்பாதே
அகிலம் யாவுக்கும் நீ அரசன் ஆனாலும் மா மகிமை நிறைந்த ஒரு மாளிகையில் வாழ்ந்தாலும் - விரும்பாதே
பெலத்தால் வீரனெனப் பேர் கீர்த்தி அடைந்தாலும் ஜலத்தின் ஓட்டம்போலே லக்ஷணத்தில் ஒழிந்து போவார் - விரும்பாதே
திட்டமாய் நூல் கற்றுத் தேர்ந்த ஞானி என்றே அட்டதிக்கிலும் உன்பேர் இஷ்டம் புரிந்தாலும் - விரும்பாதே
பொன்னும் பொருளும் உன்றன் பொக்கிஷமானாலும் என்ன புகழ்ச்சி என்று இப்போதே வெறுத்துநீ - விரும்பாதே
லோக ஆஸ்தி எல்லாம் குப்பை எனவே தள்ளு ஏசு பரன் உனக்கு ஏற்ற பொக்கிஷம் தானே - விரும்பாதே
நிழலைப் போலே ஏகும் நிலையாச் செல்வமதில் களிகூராமல் யேசு கர்த்தன் பதத்தைத் தேடு - விரும்பாதே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal