வினை சூழா திந்த
vinai soozhaa thindha
வினை சூழா திந்த இரவினில் காத்தாள், விமலா, கிறிஸ்து நாதா.
கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர், பிர காசனே, பவ நாசனே, ஸ்வாமி! - வினை
1.சென்ற பகல் முழுதும் என்னைக் கண் பார்த்தாய்; செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய்; பொன்றா தாத்ம சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய்; பொல்லாப் பேயின் மோசம் நின்றெனைக் காத்தாய். - வினை
2.சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே; ஜோதிநட் சத்திரம் எழுந்தன வானே; சேரும் விலங்கு பட்சி உறைபதி தானே சென்றன; அடியேனும் பள்ளி கொள்வேனே. - வினை
3.ஜீவன் தந்தெனை மீட்டோய் சிறியேன் உன் சொந்தம்; ஜெகத் தின்பங்கள் விழைந்து சேர்தல் நிர்ப்பந்தம்; பாவியேன் தொழுதேன் நின் பாதார விந்தம்; பட்சம் வைததாள்வையேல், அதுவே ஆனந்தம். - வினை
4.இன்றைப் பொழுதில் நான் செய் பாவங்கள் தீராய்; இடர்கள் துன்பங்கள் நீங்க என்னைக் கை சேராய்; உன்றன் அடிமைக் கென்றும் உவந்தருள் கூராய்; உயிரை எடுப்பையேல், உன் முத்தி தாராய். - வினை
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal