வேதமே என்ன சொல்லுவேன்
vedhamae enna solluven
வேதமே என்ன சொல்லுவேன்?-நின் மாட்சியை
சேத மிலாது நன்னாதர் தம் அருள் திருப் பாதமுறும் நெறி யோது மொரே சத்ய. – வேத
கண்முன் நீ எழுந்தானால் கரையிலா ஞானம் காந்தி நற்பனிமழை கசிந்திடும் வானம் புண் மனமுடையோர்க்குப் புகழருந் தானம் புசித்திடக் கசித்திடருசித்திடும் பானம். – வேத
சிறியவர் பெரியவர் செல்வர்கள் வலியார் தீரர்கள் வீரர்கள் சீரியர் எளியார் அறிஞர்கள் அல்லவர் ஆடவர் மெலியார் அனைவரும் அருந்திட அருந்திடச் சலியார். – வேத
கனபல மருளுவாய் தினந்தினங் காலை களைப்பினைப் போக்குவாய் களைப்புறு மாலை தினமென திதயமே திருத்தலுன் வேலை செப்பருங் கனிதருங் கற்பகச் சோலை. – வேத
அகமுறு மானைகள் விழுந்து தள்ளாடும் அருள்நதி ஆடுகள் நடந்துனி லோடும் தகவுனின் கரைகளில் குருவிகள் கூடும் தருக்கள் செழித்திருக்கும் தாசர்கள் நாடும்.- வேத
பொன் அபரஞ்சியிலும் உன்விலை பெரிதே! பூவுலகினிலுனக் குவமைக ளரிதே நின்னை யசட்டை செய்வோர் நிலைமிக வறிதே! நின்படிப் பறியாதோர் கல்விமா சிறிதே!. – வேத
இருபுறங் கருக்குவாள் தனிலும் நீ கூரே! இகபரம் ரண்டிற்கும் உன்வழி நேரே! கிருபை எத்தனமுனக் கேற்ற நற்பேரே! கிறிஸ்துவின் அருள்தனை எனக்கு நீ வாரே!. – வேத
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal