வருக வருக வருக வருக
varuga varuga varuga varuga
வருக வருக வருக வருக வருக வருக வருகவே வையமெங்கும் மெய்யிலங்க வானரசு வருகவே
பெருக பெருக பெருக பெருக பெருக பெருக பெருகவே பெருமை பேய்மை நீங்க அன்பு தூய்மைநீதி பெருகவே
ஆதி அன்பு குன்றும் சபைகள் மவர்ந்தெழுந்து வளரவே ஆவி ஆற்றல் ஊழியரில் அதிகமாகப் பெருகவே நீதி வாழ்வில் நின்று இறை அன்பைச் சான்றுபகரவே நேசர் இயேசு பாதம் நல்கும் இறையியலும் பெருகவே.
சாதி பேதம் லஞ்ச ஊழல் சமூகமதில் ஒழியவே சாவு நோவு காயம் ஏழ்மை உயர்வு - தாழ்வு அழியவே நீதி நியாயம் யாவருக்கும் ஒன்றுபோல நிலவவே நேர்மையில்லா ஆளுகைகள் நாட்டினின்று அகலவே.
தீய ஒழுகல் தீய பழகல் மூட எண்ணம் குறையவே தீமை உந்தும் சந்தடிகள் காட்சிகளும் மறையவே தூய ஆவி இல்லமாக உள்ளமுடல் உய்யவே தூய வாழ்வின் சின்னமாக இயேசுராசு வருகவே.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal