வரவேணும் பரனாவியே
varavenum paranaaviyae
வரவேணும் பரனாவியே, இறங்குஞ் சுடராய் மேவியே.
மருளாம் பாவம் மருவிய எனக்கு வானாக்கினியால் ஞான தீட்சை தர, - வர
1.பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோய்களும் வலியகொடும் ரோகமும் மாம்சசிந்தை ஓடுமே; பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன், எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம், - வர
2.என்றன் பவம்யாவையும் எரிக்கும்வகை தேடியும் எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன்; என்றன் செயலால் யாதொன்றும் முடியா தின்றே வானாக் கினி வரவேணும், - வர
3.குடிகொள் எந்தப்பாவமும் அடியோடே தொலைத்திடும், தடுத்தாட்கொள்ளும் தோஷமும் சாம்பலாகச் செய்திடும்; படிமிசை காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல் அடியேன் ஏசுவுக் கனுதினம்பணி செய்ய, - வர
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal