வாரும் பெத்லகேம்
vaarum pethlagem
1.வாரும், பெத்லகேம் வாரும் - வாரும், வரிசையுடனே வாரும்; வாரும், எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை, வாரும், விரைந்து வாரும்.
2.எட்டி நடந்து வாரும் - அதோ ஏறிட்டு நீர் பாரும்; பட்டணம்போல் சிறு பெத்லகேம் தெரியுது, பாரும் மகிழ்ந்து பாரும்.
3.ஆதியிலதமேவை - அந்நாள் அருந்திய பாவவினை; ஆ! திரித்துவ தேவன் மனிதத்துவ மாயினர், இது புதுமை!
4.விண்ணுலகாதிபதி, - தீர்க்கர் விளம்பின சொற்படிக்கு; மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில் மானிடனா யுதித்தார்.
5.சொல்லுதற் கரிதாமே, - ஜோதி சுந்தர சோபனமே; புல்லணையிற் பசுமுன்னணையிற்பதி பூபதிதான் பிறந்தார்
6.மந்தை மாடடையில் - மாது மரியவள் மடியதனில்; கந்தைத் துணியதை விந்தைத் திருமகன் காரணமாய் அணிந்தார்.
7.தூதர் பறந்துவந்து - தேவ துந்துமி மகிழ்பாட; மாதவ ஞானிகள் ஆயர்கள் பணிந்து மங்களமொடு நாட.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal