வாரும் நாம் எல்லாரும்
vaarum naam ellaarum
வாரும் நாம் எல்லாரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்; - சற்றும் மாசிலா நம் யேசு நாதரை வாழ்த்திப் பாடுவோம். ஆ!
1.தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார், - இந்தத் தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார். - வாரும்
2.மா பதவியை இழந்து வறியர் ஆன நாம், - அங்கே மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார். - வாரும்
3.ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர், - பாரும் நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார். - வாரும்
4.மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே, - இந்த மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் - வாரும்
5.பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே, - அவர் பட்சம் வைத் துறும் தொழும்பரை ரட்சை செய்கிறார். - வாரும்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal