வாரும் என் இயேசு தேவனே
vaarum en yesu devanae
வாரும் என் இயேசு தேவனே அடியானைக் கண் பாரும் என் இயேசு தேவனே -2 வாரும் அடியானுந்தன் பாதம் பணிந்தேன் தேவா - 2 வந்து திவ்யாசீர்வாதம் தந்து அரவணைக்க
அன்னை தந்தையிலும் மேலாய் அடியானின்மேல் அன்பு கூர்ந்திட்ட அன்பரே -2 பாரக்குருசில் தொங்கிப் பாவம் அனைத்தும் போக்கி -2 நித்திய காலம் வாழ்ந்திட நித்திய ஜீவனளித்த
சாபத்தின் சந்ததியாக அவனிதனில் அலைந்து அழிந்து எந்தனை -2 எந்தனை சாபம் அனைத்தும் போக்கி சொந்த தனயனாக்கி - 2 தீர்த்த சத்திய பரனே நித்திய என் பிதாவே
பரிசுத்த பாதை திறந்து பரிசுத்தராம் உம்மையே பின்பற்றிட -2 பரிசுத்த ஜீவியத்தைப் பரனே எனக்களித்து -2 பரிசுத்தமாய் வாழ்ந்திட பலம்தந்து பாதுகாக்க
பரலோகில் சேர்த்துக்கொள்ள பரனே நீர் அதிசீக்கிரம் வருவதாலே -2 ஆனந்தத்துடன் வாழ்ந்து அவனிதனில் அடியான் -2 அல்லேலூயா பாடி அகமகிழ்ந்திடவே
அல்லேலூயா ஸ்தோத்திரம் அன்பருக்கு அல்லேலூயா ஸ்தோத்திரம் பருக்கு -2 அல்லும் பகலும் உந்தன் அடிபணிந்து போற்றி -2 ஆனந்தத்துடன் உம்மை அவனியில் அறிவித்திட
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan