ஆனந்தம் கொள்வோம்
aanandham kolvom
ஆனந்தம் கொள்வோம் அகமகிழ்ந்திடுவோம் ஆர்ப்பரித்திடுவோமே - ஆ! ஆ!
இயேசு கிறிஸ்து தாமே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தாரே - 2 அல்லேலூயா கீதம் பாடி - 2 ஆர்ப்பரித்திடுவோம் நாம் கூடி - 2
விண்ணவர் இயேசு மண்ணதில் வந்து சாத்தானை வென்றனரே - ஆ! ஆ! கல்வாரி மா மலை தனிலே கஸ்தியடைந்ததினாலே - 2 மரணத்திற்கதிபன் பிசாசை - 2 அழித்தார் தம் மரணத்தினாலே - 2
மரணத்தை ஜெயித்து மகிபன் எழுந்தார் மகிமை அடைந்தனரே - ஆ! ஆ! பாதாளத்தை அவர் வென்றார் வேதாளத்தை அவர் வென்றார் - 2 மரணத்தின் கூரதை ஒடித்தார் - 2 மானிடர்க்காகவே தானே - 2
பாவத்தின் பெலனாம் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றி முடித்தனரே - ஆ! ஆ! ஜீவாதிபதியாம் இயேசு ஜீவப்பிரமாணத்தை ஈந்து - 2 என்றென்றும் ஜீவனோடிருக்க - 2 நம்மையும் அழைத்தாரே இயேசு - 2
உயிர்த்த கிறிஸ்து மேலான நாமத்தை வகித்துக் கொண்டதினால் ஆ! ஆ அவர்திரு நாமத்தில் நாமே தினமும் ஜெயங்கொள்வோமே - 2 ஜெயம் ஜெயம் என்று நாம் பாடி - 2 ஸ்தோத்திரிப்போம் ஒன்றாய்க் கூடி 2
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan
- காலைதனில் களிப்புடனேkaalaidhanil kalippudanaeSadhu. G. Devanesan