என் தேவனே என் தந்தையே
en devanae en thandhaiyae
என் தேவனே என் தந்தையே நான் உம்மைத் தேடியே அலைந்தேனே -2
1. பாவியாய் இருந்தேன் பாவத்தில் மரித்தேன் பரனை அறியாமலே -2 மரணத்தின் வழியில் மதிகெட்டு நடந்தேன் -2 மன்னவா உம்மையும் தேடச்செய்தீரே -2
2. என் சிருஷ்டிகரே நான் உலகினில் உம்மை தேடியே அலைந்தேனே -2 உம்மைக் காணாமல் உயிரை யான் தெஜிக்க -2 துணிந்ததோர் வேளை என்னை சந்தித்தீரே -2
3. கடினத்தை மாற்றி காரிருள் போக்கி கருணையாய் சந்தித்தீரே -2 வல்லமையைக் காண்பித்து வல்லமையால் நிறைத்து - 2 உம்மைக் காண்பிக்கச் சித்தம் கொண்டீரே -2
4. சிலுவையில் தொங்கி சிலுவையில் மாண்ட காட்சியளித்தீரே பாவத்தைப் போக்கி சாபத்தை நீக்கி -2 என்னை இரட்சித்து ஏற்றுக் கொண்டீரே -2
5. தரிசனம் தந்து தரிசிக்கச் செய்தீர் தரணியில் அடியானை -2 சமாதானம் அளித்தீர் சந்தோஷம் அளித்தீர் -2 அளவில்லா ஆசீர்வாதம் அளித்தீர் -2
6. தேடு கண்டடைவாய் தேடு பிழைப்பாய் என்று மொழிந்தவரே -2 வாக்குத்தத்தங்களை நிறைவேறச் செய்யும் -2 வாக்கு மாறாத தேவா நான் மறவேன் -2
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan
- காலைதனில் களிப்புடனேkaalaidhanil kalippudanaeSadhu. G. Devanesan