உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்
uyirthezhundha kiristhu naadhan
உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன் உயிரோடிருப்பதால் பாவ சாபம் நீக்கி நம்மை சொந்தமாக்கியதால் ஜீவ காலமெல்லாம் மரண பயத்தைப் போக்கியே நித்திய ஜீவனீந்ததால்
அல்லேலூயா கீதம் பாடி மகிழ்வோம் ஆனந்தமாக நாம் ஸ்தோத்திரித்து நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசு தேவனை அவர் அடி பணிந்துமே
பாதகனாய் பாவத்தில் மரித்த பாவியை பூதலத்தின் புகழை நம்பி கெட்ட துரோகியை மனுஷர் மகிமையை நாடி மாண்ட நீசனை தேடி மீட்டுக் கொண்டதால்
சரீர மீட்பு தரும்படி நம் நாதன் வருவதால் இமைப் பொழுதில் மறுரூபமடைவார் சுத்தர்களெல்லாம் சத்திய ஆவியினால் முத்திரித்து நம்மைக் கொண்டனர் சத்திய சாட்சியாகவே
தேவ மகிமைக் கென்று நம்மை மகிபன் அழைத்ததால் வாக்குத்தத்தம் வரைந்து தந்து மகிழச் செய்ததால் நித்திய ஸ்தலம் ஒன்று ஆயத்தப்படுத்தப் போனதால் என்றும் விழித்திருப்போமே
பரம இயேசு பக்தர்களைச் சேர்த்துக் கொள்ளவே ஆகாயத்தில் வெளிப்படுவார் ஜெகத்தை நோக்கியே சுத்தர் அன்று பறந்து போவார் சுகித்திருக்கவே நித்திய காலமாகவே
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan
- காலைதனில் களிப்புடனேkaalaidhanil kalippudanaeSadhu. G. Devanesan