காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்
kaathiruppom parisuthaavikkaay
காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்ப் பரனின் சமுகமதில்
கர்த்தரின் இயேசுவின் வாக்குத்தத்தங்களை கருத்துடன் விசுவாசித்து - 2
தேவன் நம்மேல் வைத்த அன்பைக் கிறிஸ்துவால் விளங்கச் செய்தார் - 2 தேவன்பை அவர் பரிசுத்த ஆவியால் உள்ளத்தில் ஊற்றிடுவார் - 2
பரிசுத்த ஆவி பெற்றிட நாமே கிருபையின் காலம் இதே - 2 பரிசுத்தமாகுதல் பெற்றிட நமக்கு பரனின் அருளிதுவாம் - 2
ஆவியின் கனிகள் அடைந்திட நாமே ஆவியில் நிறைந்திடுவோம் - 2 ஆக்கினைத்தீர்ப்பினின் றகன்றிடவே நாம் ஆவியின்படி நடப்போம் - 2
தேவ ஆவியால் நடத்திடப்படுவோர் தேவனின் பிள்ளைகள் - 2 தேவனின் ஆவியானவர் சபையை சத்தியத்தில் நடத்திடுவா - 2
ஒருமனப்பட்டு ஊக்கமுடனே விண்ணப்பம் செய்திடுவோம் - 2 ஒருமனப்படுவோம் ஒழுங்குடன் நடப்போம் உத்தமர் வருகைக்காக - 2
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காலைதனில் களிப்புடனேkaalaidhanil kalippudanaeSadhu. G. Devanesan