காலைதனில் களிப்புடனே
kaalaidhanil kalippudanae
காலைதனில் களிப்புடனே கர்த்தரை ஸ்தோத்திரிப்போம் இக் காலைதனில்
1. சென்றதோர் இரவினில் க்ஷேஷமமுடன் காத்ததால் தோஷம் அணுகாமல் சுகம் பெலம் ஈந்ததால் ஸ்தோத்திரிப்போம் - 2
2. வாழ்வினில் வறட்சிகள் வந்திடாமல் காத்ததால் வாழ்நாளில் இந்நாளை கூட்டி நமக் கீந்ததால் ஸ்தோத்திரிப்போம்
3. நித்திரை தந்துமே நித்திய காவலாளராய் இரத்தத்திற்குள் வைத்துமே பரிசுத்தமாய்க் காத்ததால் ஸ்தோத்திரிப்போம்
4. அந்தகாரம் அணுகாமல் அருகில் இருந்து காத்ததால் ஐங்காயங்களில் அடைக்கலம் ஈந்ததால் ஸ்தோத்திரிப்போம்
5. சாத்தானின் சதிமோசம் யாதொன்றுமே அணுகாமல் தூங்கிடும் வேளையில் சூட்சமாகக் காத்ததால் ஸ்தோத்திரிப்போம்
6. ஆனந்தக் களிப்புடன் அதிகாலையில் விழித்துமே ஆனந்தமாய்க் கீதங்கள் பாடிடச் செய்ததால் ஸ்தோத்திரிப்போம்
7. சாத்தானின் தந்திரங்கள் யாவற்றையும் எதிர்த்திட சர்வாயுதவர்க்கத்தை தரித்து வெற்றி சிறந்திட ஸ்தோத்திரிப்போம்
8. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அல்லேலூயா ஸ்தோத்திரம் கடந்த எல்லா நாளிலும் வெற்றி நமக்கீந்ததால் ஸ்தோத்திரிப்போம்
9. எந்நாளும் எந்நேரமும் வெற்றி தந்து காத்திட உண்மையுள்ள நம் பிதா உயிரோடிருப்பதால் ஸ்தோத்திரிப்போம்
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan