எந்தையே இயேசு தேவா
endhaiyae yesu devaa
எந்தையே இயேசு தேவா உந்தன் பாடை யாரால் வர்ணிக்கலாகும் - 2 ஆயிரம் நாவிருந்தாலும் அதைச் சொல்லி வர்ணிப்பதும் அரிது - 2
கெத்சமனே தோட்டமுதல் உந்தன் பாடை கொல்கொதா தான் வரைக்கும் - 2 ஆரால் வர்ணிக்கலாகும் ஆச்சரியம். ஆரால் வர்ணிக்கலாகும் - 2
உந்தன் பாடை நினைத்து எந்தன் உள்ளம் உருகியே போகுதையோ - 2 கல்மனதும் கரையும் காதலன். உந்தன் பாட்டை நினைத்தால் - 2
கல்லாம் நெஞ்சுடை பாவி வந்திடுவாய் காதலரண்டை இன்று - 2 கல்மனதும் உருகும் நேசரின் கஸ்திப் பாட்டை நினைத்தால் - 2
கெத்செமனே தோட்டமதில் பாடுபட்டு இரத்த வியர்வை வடியும் போது - 2 பரலோகத்தின் தூதன் கண்டு பரிதவித்து வந்ததும் ஆச்சரியம் - 2
கல்தூணில் கட்டி வைத்து போர் சேவகர் ஆறுபேர் அடிக்கும் போது - 2 தங்கத் திருமேனியும் திரு சரீரம் கீறிப் பிளர்ந்ததையோ - 2
கட்டு அவிழ்க்கும் வேளையில் இரத்தத்தில் கமந்து விழுந்த காட்சி - 2 தாங்க முடியவில்லை என்னால் இது சகிக்க முடியவில்லை - 2
துஷ்ட மனம் துடிக்கும் எந்த எந்த கல் மனமும் கரையும் - 2 கடின உள்ளம் உருகும் காதலியின் கஸ்திப் பாட்டை நினைத்தால் - 2
பாவத்தின் பாசத்தினால் கடினப்பட்டு பாவியே வந்திடுவாய் - 2 அன்பால் அழைக்கிறாரே உன்ன அவர் சொந்த தாக்கிட - 2
முள்முடி சூட்டப்பட்டு மூன்றாணியில் துடிதுடிக்கும் காட்சியை - 2 தாங்க முடியவில்லை என்னால் சகிக்க முடியவில்லை - 2
என் நேசரே காதலரே என் அருமைப் பிதாவே - 2 என்னதான் ஈடுசெய்வேன் இதற் கெல்லாம் என்னதான் ஈடுசெய்வேன் - 2
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan
- காலைதனில் களிப்புடனேkaalaidhanil kalippudanaeSadhu. G. Devanesan