வாரும் தேவா வாரும் தேவா
vaarum devaa vaarum devaa
வாரும் தேவா வாரும் தேவா - 2 பலவீனன் என்னை பலப்படுத்த வாரும் தேவா -2 நின் பலத்தால் பலப்படுத்தி - ஸ்திரப்படுத்தி நிலைநிறுத்த - 2
ஆதி பரிசுத்தர்களை பலப்படுத்தி பாதுகாத்தீர் ஆதி திரு வல்லமையால் நிறைத்து நிலைநிறுத்தி காத்தீர் அன்று போல இன்றும் செய்து - ஏழை என்னை பலப்படுத்த -2
ஆதி பரிசுத்தரைப் போல் பலமாய் சாட்சி கொடுத்திடவே ஆதி பரிசுத்தரைப் போல் நற்சாட்சி பெற்று நடந்திடவே ஆதி திரு கிருபையினால் - அடியான் என்னை பலப்படுத்த -2
சோதனையில் சோர்ந்திடாமல் அடியான் என்னை பலப்படுத்த சோதனையை வென்றவரே சூழ்நிலையில் வந்து என்னை சோர்ந்திடாமல் வென்றிடவே ஏழை என்னை பலப்படுத்த -2
ஆபத்துகள் அணுகிடாமல் அடியான் என்னை பாதுகாக்க அகில சத்துருக்களையும் மேற்கொண்டு முன்னேறிச் செல்ல அடியான் பிரகாசித்திட வாரும் மகிபா பலப்படுத்த -2
போர்க்களமாம் ஜீவியத்தில் விழித்திருந்து ஜீவித்திட போர்க்களத்தில் விழித்திருந்து போர்புரிந்து ஜெயம் எடுக்க போர் வீரரின் அதிபதியே -பலப்படுத்தி பாதுகாக்க - 2
உமது சாட்சியாம் அடியான் இரத்தசாட்சி ஆகிடவே உமது பரிசுத்தாவியின் நிறைவினாலே நிறைத்து என்னை உமது திருபலத்தினாலே - இடைகட்டியே நிலைநிறுத்த -2
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan