வாரும் தேவா எங்கள் மத்தியில்
vaarum devaa engal mathiyil
வாரும் தேவா எங்கள் மத்தியில் இப்போ - நீர் ஆசீர்வாதம் தந்திட - 2
வாக்குத்தத்தம் ஈந்த வல்லமை தேவனே - 2 எங்கள் மேல் இரங்கிடும் இப்போது - 2
பாவிகளை இன்று சந்திக்கும் தேவா நீர் பாவ சாபம் விட்டு நீங்கிட பரிசுத்தமாகிட பரலோகைப் பெற்றிட - 2 பாரினில் உம்மைப் பின்பற்றிட - 2
ஆவியின் அபிஷேகம் ஈந்திடும் தேவாநீர் ஆவியின் பலத்தினால் ஜீவிக்க ஆச்சரியப்பட்டிட உலகத்தார் யாவரும் - 2 தூய ஜீவியமதைக் கண்டு - 2
பலவீனப்பட்ட சுத்தர்கள் யாவரும் பலனடைந்து முன்னேறிட - 2 பலமான ஜீவியம் பாரினில் செய்திட - 2 பணிந்து ஆவியால் நிறைத்திட - 2
ஆவியினால் நடத்திட அடியார்கள் அடிபணிந்தோம் தேவா வந்திடும் நானிலம் மீதினில் நற்சாட்சி பெற்றிட - 2 நாதா உம்மைப்பின் பற்றிட - 2
அதிகாரத்துடன் ஜீவித்து அடியார்கள் அமலா உம்மை எங்கும் காண்பிக்க ஆயனே எங்கட்கு அருள்புரிந்திடும் - 2 அடியார்களை அரவணைத்திடும் - 2
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan