வாரீரோ வினை
vaareero vinai
வாரீரோ? வினை தீரீரோ? என்னைக் காரீரோ? ஜீவன் தாரீரொ, யேசு.
வாரேனென்றீர், வரந் தாரேனென்றீர், சுவாமீ; பாரினிலே யெனக்கு யாருமில்லை, துணைக்கு. - வா
1.தேனே, மரிமகனே, தேடி மறுகுங் கோனே. சேனைகளின் சீமானே, சிந்தை கலங்கி நானே கானகமே மேவும் மானது போலானேன்; வானகம் போன தேவா, ஏனோ வரத் தாமதம்? - வா
2.அட்ட திக்கெங்கு மென்னைத் துட்டப் பசாசுக் கூட்டம் இட்டப் படுத்தவல்லோ கிட்ட வளையுது, பார் அடுத்தாலோ, அம்பைத் தொடுத்தாலோ என்ன! அடுபடையாக நின்று தடு படை செய்வீர், யேசு. - வா
3.காணாத ஆட்டைத் தேடிக் காடெங்கும் சென்ற கோன் நீர் கண்டு பிடித்த ஆட்டைக் கொண்டு தொழுவஞ் சேர்க்கக் கருத்துடனே மிக உரித்துடனே இரு கரத்திலேந்தி வலப் புறத்தில் வைப்பீர் திண்ணம். - வா
4.வீடு எனக்குச் செய்ய மேலோகம் போன தேவா, கூட இருத்தி வைக்கக் கூப்பிட வாறேனென்றீர்; கொண்டு வருவீர் முடி, நின்று வருவீர் நொடி; கண்டு மகிழ்வேன், கூடி நின்று புகழ்வேன் கெடி. - வா
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal