வானோர் புவோர்
vaanor puvor
வானோர் பூவோர் கொண்டாட மனுவேலுயிரோ டெழுந்தார் ஜெயமே.
தீனதயாளன் திருமறைநூலன், திரிபுவனங்களாள் செங்கோலன், ஞானசு சீலன் நரரனுகூலன், நடுவிடவே வருபூபாலன். - வானோர்
1.அலகையை ஜெயித்தார், அருள்மறை முடித்தார், அருமலர்க்கா காவலை யொழித்தார்; நிலைதிரை கிழித்தார், தடைச்சுவரிடித்தார், நேராய்த் தரிசனந்தர விடுத்தார். - வானோர்
2.செத்தோ ருயிர்த்தார்,திருநகர் பூத்தார், தேடற் கரியதோர் காட்சிவைத்தார், மற்றோர் பார்த்தார், மலைவுகள் தீர்த்தார், மரித்தோர் முதற்பலனாய்ச் செழித்தார். - வானோர்
3.அடியவர் கண்டார், ஆர்துயர் விண்டார், அருமறைக் கருத்தாய்ந்தே நின்றார், மடமையகன்றார், மயக்கமேகொன்றார், வானானந்தமே மனங்கொண்டார். - வானோர்
4.மகதலனாளு மதி சூசன்னாளும், மயங்கியழுதயோ வன்னாளும், மகவிருவர் தருதா லொமித்தாயும் மரை மலரடிதொழு தேத்தினரே. - வானோர்
5.எம்மாவூர் சீடரி ருவர்க்குந் தோமா இலதுபதின் மருக்குமே காட்சி நன் மனதுடனே பதினோருவருக்கும் நடுவகத்தே வருமாசூட்சி. - வானோர்
6.மகதலனாட்கு மற்ற மங்கையர்க்கும் மகத்துவத்தே தரிசன மளித்தார்; பேதுரு தனித்தும் யாக்கோபு தனித்தும் பிரத்தியேகத்தில் தரிசித்தனரே.- வானோர்
7.கலிலே யாக்கடலில் எழுவரும் பார்த்தார்; காட்சி மலையஞ் நூறுபேர் பார்த்தார்; உலை எருசலமில் சீடரைச் சேர்த்தார்; ஒலிவ மலைமேல் திரள்பேர் பார்த்தார். - வானோர்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal