வானராச்சியம் வந்ததோ கோகோ
vaanaraacchiyam vandhadho kogo
வானராச்சியம் வந்ததோ கோகோ! மாந்தரே தவம்செய்யும் ஓ கோகோ!
ஆன சாட்சி தியானசூட்சி மெய்ஞ் ஞான காட்சியர் தோன்றினார்.- வான
1.மன்னவன் கிறிஸ்தாதிபன் வந்தார் வாகுறப் பவமே ஒழிந்திடவே குணப்படுவீர்களே என்னிலும் பெரியார் வலியார் அவர் இந்நிலத்திடை மேவினார் உயர் உன்னதக் கிருபை ஆழமே.- வான
2.பிந்தி வந்தவர் முந்தி இருந்தவர் பேசரும் பொருளார் பரம்பர நேசர் நம் கருணாம்பரர் சுந்தரப் பரிபூரணர் காரணர் ஜோதிசொந்த அனாதி மைந்தன் இம் மாதிரந்தனில் மேவினார்.- வான
3.அண்ணலார் பாத ரட்சையின் வாரையே அவிழ்க்க வாய்மையில் எடுக்க அல்லது சுமக்கப் பாத்திரன் அல்ல நான் திண்ணம் என் முழுக்கோ ஜலத்தீர்த்தமே தீயினாலும் அரூபியாலும் ஸ்நானமே அவர் ஈகுவார்.- வான
4.மரத்தின் வேர் அருகே முன் கோடாலியும் வைத்திருக்குது பத்திரத்துடன் எச்சரிக்கை விடாதேயும் வரத்தில் நற்கனி தான் தருகாத் தரு வைத்திடக் கிட வெட்டி மிக்கழல் அக்கினிக்கிரையாக்குவார்.- வான
5.தூற்றுக்கூடை கரத்தில் இருக்குது துறையினில் தமதுரிய நற்களம் அற விளக்கி அறுதியிலே தேற்றக் கோதுமை கேயத்தில் சேர்த்துமே தீயதுர்ப்பதர் ஆனதைத் தழலால் எரிப்பர் இன்னேரமே.- வான
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal