வானமும் பூமியும்
vaanamum poomiyum
1.வானமும் பூமியும் வகித்திடுந்தேவே! வளம்நிறை ஆண்டவரே! - தேவரீர், ஈனராம் எம்மேல் இரங்கி இவ்வறுப்பை ஈந்ததற்காய்த் தோத்ரம்!
2.பாவம்நிறைந்தோர், பாத்திரமற்றோர், கோவத்துக்கேயுரியர், - வறியர் ஆயினர் எமக்கிவ்வறுப்பை யளித்த ஆண்டவரே, தோத்ரம்!
3.வான மன்னாவை வருஷித் திஸ்ரேலை வருடநாற்பது காத்தீர்! - அந்த வல்லமை எமக்கிவ் வருடமுங்காட்டிய வானவரே, தோத்ரம்!
4.ஐந்தப்பங்கொண்டை யாயிரம்பேரை அமர்த்திப் போஷித்தீர் - ஐயா! போந்த எம் பசியும் புறமுறச்செய்தீர்; புண்ணியரே, தோத்ரம்!
5.பெரிய உம்நாமம் பேருலகோங்க, வறியவர் மிடியகல, - இவ்வீவை அறிவுடன்காத்தே அருமையாய் ஆளும் நெறியெமக் கீந்தருள்வீர்!
6.திருச்சபைபண்ணை திகழ்பயிர் நாங்கள் தேவரீர் பயிர்க்காரர், - திருவே, ஆவியின் மழையால் ஆக்கிடும், எம்மை அழகிய கதிர்மணியாய்!
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal