வான நகரத்தின்
vaana nagarathin
வான நகரதின் மேன்மையென சொலுவோம், கன வலன் நலவருக்கருள்.
1.பானொளி ரத்னங்கள் அஸ்திபாரமாந் திருவாசல்கள் பன்னிரு முத்துக்கள் தெரு பொன்னின்மயமே; தேனிலும் மதுரம் தெளிவிற் பளிங்கதான ஆறும் ஜீவதருவும் இருக்கும் செப்பரும் அழகதான. - வான
2.அங்குநோய், துன்பம், விசாரம், அக்ரமம், கண்ணீர், தரித்திரம் அற்பமு மிருப்பதில்லை, சொற்பமாகிலும் பொங்கியே முச்சத்துருக்கள் போரினுக் கிழுப்பதில்லை புண்ணியனார் சொன்னதிரு உன்னத எருசலையாம். - வான
3.அந்நகர்க் குடிகள் வெண்மையான அலங்காரமான அர்ச்சய உடுப்பு, சிரமானதிற் கிரீடம் மன்னவர் போலே அணிந்து மகிமையி னாசனத்தில் வாய்மையாக வீற்றிருப்பர்; தூய்மையான அந்த நல். - வான
4.நேயமுற்பிதாக்கள், தீர்க்கர், நின்மலன் அப்போஸ்தலர்கள் நீதிமான்கள் எல்லவரும் தூதர் நல்லோரும் ஓய்வதின்றித் தோத்ர கீத உச்சிதத் தொனிமுழக்கி உன்னதனைப் போற்றுவர்கள்; பன்னரும் சிறப்பதுள்ள. - வான
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal