உழைப்பாளச் செல்வங்களே
uzhaippaalas selvangalae
உழைப்பாளச் செல்வங்களே - நீங்கள் இளைப்பாற வாருங்களே - என்னண்டை உழைப்பாளச் செல்வங்களே
களைப்பாள ராகநீர் கங்குல் பகலாகக் கடினமாய் உழைத்தபின் கவலைகள் மாற்றிட - உழைப்
1.வசதியாய் வாழ்வார்க்கு மாளிகை அமைக்கின்றீர் வண்ண மலர்ச் சோலை வளர்த்துக் கொடுக்கின்றீர் அசதியைப் போக்கியே ஆறுதல் அளிப்பவர் ஆருண்டு பூமியில் ஆண்டவன் யானின்றி - உழைப்
2. உண்ணும் பொருளுங்கள் உழைப்பாலே விளைந்தது உடையுடன் நகைகளும் உபயோகப் பொருள்களும் எண்ணிக்கை இல்லாமல் உலகோர்க்குச் செய்திட்டீர் இதயத்தின் பாரத்தை எவரிடம் இறங்குவீர் - உழைப்
3. ஆலையின் அனலிலே ஆக்கையை இளக்குவீர் ஆதவன் வெயிலிலே வேர்வையில் அழுங்குவீர் நூலறி வோடுங்கள் நுண்ணறி வாலென்றும் நொந்துநீர் உழைக்கின்றீர் நோயையார் தீர்ப்பவர் - உழைப்
4. மானுடர் சுகவாழ்வு வாழவே உழைக்கின்றீர் மனதுக்குத் தேறுதல் ஆறுதல் தருவோர்யார்? ஊனுடல் சோர்ந்தாலும் உள்ளத்தில் சோராதீர் உம்முடன் இருப்பேன் நான் ஒருபோதும் கைவிடேன் - உழைப்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal