உருகுது உருகுது உள்ளமெல்லாம்
urugudhu urugudhu ullamellaam
உருகுது உருகுது உள்ளமெல்லாம் உம் அன்பை நினைக்கையிலே பெருகுது பெருகுது வெள்ளமென உம் கிருபை எனக்குள்ளே-2 எனக்காய் சிலுவை சுமந்தீர் அன்று அதனால்தானே பிழைத்தேன் இன்று-2
உவ்வொரு நாளும் உமக்குள்ளே நான் நிலைத்திட வேண்டிடுவேன் கண்மணிபோல் எனை காத்திடும் தேவனின் கரமதை விட மாட்டேன்-2 ஒரு வழியாக உம்மிடம் சேர்ந்தேன் திரும்பவும் போவேனோ உம் சந்நிதி மறப்பேனோ
சிறுமையும் எளிமையும் ஆன என்மேல் நினைப்பாய் இருப்பவரே உணர்வாய் உயிராய் உள்ளம் முழுதும் வலம் வரும் ஆண்டவரே-2 தேவரீர் எந்தன் துணையாய் இருந்து விடுதலை தந்தீரே-என்னை உமக்கென தெரிந்தீரே
மடங்கிய என்னைத் தாங்கிய தேவனில் அடங்கிட வேண்டிடுவேன் விழுகிற என்னைத் தூக்கிடும் தேவனைத் தொழுதிட நாடிடுவேன்-2 அழுகிற போது அரவணைத்தீரே ஆறுதல் தந்தீரே-ஐயா அடைக்கலம் கொடுத்தீரே
உலகம் உண்டாகும் முன்னே என் பெயரை முன் குறித்து வைத்ததென்ன வானமும் பூமியும் படைத்தவராலே ஒத்தாசை வந்ததென்ன-2 இதற்கென்று ஈடாய் உமக்கென்று நானும் இதுவரை தந்ததென்ன இந்த அன்பிற்கு விலையும் என்ன-
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal