அப்பா உம் கிருபையால்
appaa um kirubaiyaal
அப்பா உம் கிருபையால் அன்பே உம் இரக்கத்தால் இன்னும் உயிரோடிருக்கிறேன் நான் இன்னும் அழியாதிருக்;கிறேன்
பாழும் நிலம்போல பரிதாபமான என்னை பக்கம் நெருங்கி வந்து பட்சமாய் பார்த்தீர் (பற்றிக் கொண்டேன் பாதமதை- முத்தம் செய்வேன் கோடிமுறை-2) தாயவள் அன்பைக் காட்டி முழங்காலில் தாலாட்டி தந்தைபோல் அரவணைத்து உம்மிடத்தில் சேர்த்தீர் (உம்மைப்போல தெய்வமில்லை- உம்மிடத்தில் மாற்றமில்லை-2) கண்மூடி படுக்கையில் காலைதோறும் விழிக்கையில் என்றும் என்னோடிருக்கிறீர் என்னை உறங்காமல் காத்து நிற்கிறீர்
ஆறு இக்கட்டுக்கும் பொல்லாப்புக்கும் விலக்கி அடிமை என்னைக்கூட அன்பு கொண்டு காத்தீர் (உந்தன் அன்பில் மாயமில்லை- உம்மைப்போல யாருமில்லை-2) மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்து போகையிலும் இருளின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்டீர் (உந்தன் முன்னே தோல்வியில்லை- உம்மையன்றி தெய்வமில்லை-2) தண்ணீரைக் கடக்கையில் தள்ளாடி நடக்கையில் தோளில் தூக்கிச் சுமந்தவரே தீங்கு நாளில் என்னை மறைத்தவரே
தேவ ராஜ்ஜியத்தில் என்னைக் கொண்டு போய் சேர்க்க பாவ ராஜ்ஜியத்தில் எனக்காக வந்தவரே (எனக்காக வந்தவரே-எல்லோருக்கும் பெரியவரே-2) இயேசு நாமத்திலே என்றும் எங்கும் ஜெயம் எடுக்க நேசம் வைத்து உம்மை எனக்காக தந்தவரே (உத்தமரே உம் பாதம்-உண்மையிலே அது போதும்-2) சத்தியத்தில் வழி நடத்தி நித்தியத்தில் சேர்ப்பதற்கு நித்தம் புது கிருபை தந்தீர்-தேவ சித்தம் கொண்டு எனக்குள் வந்தீர்
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவர் என்னை நடத்திடும் விதமேavar ennai nadathidum vidhamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal