அப்பா நீங்க இல்லன்னா
appaa neenga illannaa
அப்பா நீங்க இல்லன்னா ரொம்ப தப்பாதான் நடந்திருப்பேன் உங்க அன்பு எனக்கு இல்லன்னா பெரும் வம்புலதான் மாட்டியிருப்பேன் உங்க இரக்கம் எனக்கு இல்லன்னா தலை கிறுக்காய் போயிருப்பேன் உங்க தயவு எனக்கு இல்லன்னா ஒரு தறுதலையாயிருப்பேன்
இது உம்முடைய கிருபை உம்முடைய இரக்கம் உம்முடைய தயவும்தான்-2 தேவ காருண்யமே என்னை தேடி வந்த தெய்வமே-2 இது உம்முடைய கிருபை உம்முடைய இரக்கம் உம்முடைய தயவும்தான்-2
என் கண்ணுல நீங்க இல்லன்னா சேத்து மண்ணுலதா புரண்டிருப்பேன் என் சொல்லுல நீங்க இல்லன்னா பெரும் கல்லடிதான் வாங்கியிருப்பேன் இந்த நெஞ்சுல நீங்க இல்லன்னா பெரும் வஞ்சனையில் சிக்கியிருப்பேன் எனக்கெல்லாமா நீங்க இல்லன்னா இன்னிக்கு இல்லாம போயிருப்பேன்
இது உம்முடைய கருணை உம்முடைய அன்பு உம்முடைய நேசம்தான்-2 தேவ காருண்யமே என்னை தேடி வந்த தெய்வமே-2 இது உம்முடைய கிருபை உம்முடைய இரக்கம் உம்முடைய தயவும்தான்-2
இந்த பூமி நீங்க இல்லன்னா தானா சுத்தறத மறந்திருக்கும் எங்க சாமி நீங்க இல்லன்னா எல்லா உயிரையும் இழந்திருக்கும் அந்த கடலு நீங்க இல்லன்னா தண்ணீரு கறைய மீறியிருக்கும் இந்த உடலு நீங்க இல்லன்னா ஒன்னும் உதவாம போயிருக்கும்
இது உம்முடைய படைப்பு உம்முடைய சித்தம்; உம்முடைய விருப்பமும்தான் தேவ காருண்யமே என்னை தேடி வந்த தெய்வமே-2 இது உம்முடைய கிருபை உம்முடைய இரக்கம் உம்முடைய தயவும்தான்-2
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவர் என்னை நடத்திடும் விதமேavar ennai nadathidum vidhamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal