அழைப்பவர் இயேசு அவரிடம்
azhaippavar yesu avaridam
அழைப்பவர் இயேசு அவரிடம் பேசு அச்சம் என்ன பயம் என்ன அந்தப் பக்கம் வீசு உயிர் தரும் மூச்சு உடன் வரும் பேச்சு ஆண்டவர் படைப்பினில் அதிசயம் ஆச்சு
அழுதிடும் குழந்தைக்கு பால் கொடுக்கும் அன்புத் தாய்க்கு ஈடுஇணை எதுவாகும் அதைவிட ஒருபடி மேலாகும் நம் ஆண்டவர் கருணையும் அதுவாகும்
செய்திடும் செயல்களைச் சிறந்திடச் செய் வரும் சுமைகளை எல்லாம் அவரிடம் வை விழுந்திட விழுந்திட எழுந்திடச் செய் உன்னைத் தாங்கிட இருகரம் இருக்குது மெய்
முதலென்றும் முடிவென்றும் முக்கனிச்சுவையென்றும் எதிலொன்றும் இயங்கிய ஜீவன் அவர் எங்கள் தேவன் அவர்
ஆண்டவரை நாடிடுவோம் அல்லேலுயா பாடிடுவோம் அவரிடம் குறைகளைக் கூறிடுவோம் அவர் புகழினைப் பாடி மகிழ்ந்திடுவோம்
அலைகடல் மீதினில் நடந்தவரே அன்று ஆயிரம் தடைகளைக் கடந்தவரே ஆத்தும தரிசனம் தருபவரே தூய ஆவியில் எப்போதும் நிறைந்தவரே
வணக்கத்திற்குரிய வாரிசவர் எந்த நெருக்கத்திலும் எங்கள் நேசரவர் தனக்கென்று எதுவுமே வைக்காமலே தந்த தயவுள்ளம் கொண்ட நம் தேவனவர்
குறைவொன்றும் இல்லாத நிறைவொன்றை உண்டாக்கும் நித்திய ஜீவனின் தந்தை அவர் எங்கள் சிந்தை அவர்
கேளுங்களேன் கொடுத்திடுவார் தட்டுங்கள் அப்போது திறந்திடுவார் தேடுங்கள் எல்லாமே கிடைக்கும் என்றார் நம் தேவனின் நீதியை ராஜ்ஜியத்தை
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவர் என்னை நடத்திடும் விதமேavar ennai nadathidum vidhamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal