அழகே அமுதே அநுகூலமே
azhagae amudhae anugoolamae
அழகே, அமுதே, அநுகூலமே என் ஆவியில் நிறைந்த பேரின்பமே உறவே உலகே உன்னதமே என் உயிருடன் கலந்த ஓவியமே கனிமொழியே எங்கள் காவியமே என் கண்ணுள்ளே புகுந்த ஒளி வெள்ளமே
பாலும் தேனும் ஓடியதே எங்கள் தேசத்தில் உம் நிழலாடியதே வறுமையும் பெருமையும் தொலைந்திட்டதே என் வள்ளலே உமை மட்டும் நினைத்திடுதே
கருவினில் என்னைத் தெரிந்தவரே என் ஒருவழி நீர் மட்டும் அறிந்தவரே விரும்பி என் பெயர் சொல்லி அழைத்தவரே நெருங்கிவந்தென்னை அணைத்தவரே
ஆதியும் அந்தமும் ஆனவரே என் ஆயுசு நாட்களின் காவலரே நீதியில் வாசமாய் இருப்பவரே என் ஆவியில் சுவாசமாய் நுழைந்தவரே
பரிசுத்த தேவனின் பாதத்திலே நான் பகலென்றும் இரவென்றும் கிடந்திடுவேன் உறவென்று அவருக்குள் நிலைத்திடுவேன் உன்னத துதிகளைச் செலுத்திடுவேன்
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவர் என்னை நடத்திடும் விதமேavar ennai nadathidum vidhamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal