உனக்கொத்தாசை வரும் நல்
unakkothaasai varum nal
உனக் கொத்தாசை வரும் நல் உயர் பருவதம், - இதோ!
தினமும் மனது நொந்து சிந்தை கலங்குவோனே - உன
1.வானம் புவி திரையும் வகுத்த நன்மைப் பிதாவின் மாட்சிமையின் கரமே வல்லமையுள்ள தல்லோ? - உன
2.காலைத் தள்ளாடவொட்டார், கரத்ததைத் தளரவொட்டார்; மாலை உறங்கமர்டார், மறதியாய்ப் போகமாட்டார். - உன
3.கர்த்தருனைக் காப்பவராம், கரமதில் சேர்ப்பவராம்; நித்தியம் உன்றனுக்கு நிழலாயிருப்பவராம். - உன
4.பகலில் வெயிலேனிலும், இரவில் நிலவெனிலும், இகல் தருவதுமில்லை, இன்னல் செய்வதுமில்லை. - உன
5.தீங்கு தொடராதுன்னை, தீமை படராதுன்மேல்; தாங்குவார் தூதர் கோடி, தாளிடறாதபடி. - உன
6.போக்கும் ஆசீர்வாதமாம், வரத்தும் ஆசீர்வாதமாம்; காக்கைக் குஞ்சுகள் முதல் கதறி நம்பிவிடுமே. - உன
7.துன்ப துயரத்ததிலும் துக்க சமயத்திலும், இன்பமுறும் பொழுதும் எல்லாம் உனக்கவரே. - உன
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal