உம்மவிட்டா எனக்கு இங்க யார்
ummavittaa enakku inga yaar
உம்மவிட்டா எனக்கு இங்க யார் இருக்காங்க-இயேசப்பா-2 இங்க உண்மையும் நன்மையும் சொல்லிக் கொடுக்க யார் இருக்காங்க-இயேசப்பா
உலகம் தோன்றும் முன்னே என்னை தெரிந்து கொண்டவர் நீர் என் உள்ளிந்திரியம் சோதித்து அறிந்து கொண்டவர் நீர்-2 உம்மை நம்புகிற யாவரையும் புரிந்து கொண்டவர் நீரே-2 எல்லா துரைத்தன அதிகாரங்களை உரிந்து கொண்டவர் நீரே-2 இந்த உண்மையும் நன்மையும் சொல்லிக் கொடுக்க யார் இருக்காங்க-இயேசப்பா
பாவி என்று தள்ளிவிடாமல் பாதுகாக்கும் தேவன் என்னைப் பலப்படுத்தி வலக்கரத்தால் தாங்கிநடத்தும் ராஜன்; பயப்படாதே என்று சொல்லி ஸ்திரப்படுத்தின தேவன் கேடகமாய் பெரும் பெலனாய் என்னைச் சூழ்ந்த ராஜன் இந்த உண்மையும் நன்மையும் சொல்லிக் கொடுக்க யார் இருக்காங்க-இயேசப்பா
என்னை ஜெநிப்பித்த கண்மலை என்னைப் பெற்ற தெய்வம் நீரே கழுகைப் போல செட்டைகளின் மேல் சுமந்து சென்றவர் நீரே உயர் ஸ்தானங்களில் ஏறிவரப் பண்ணின தேவன் நீரே உம்மை உயர்த்திடவும் துதித்திடவும் விருப்பம் வைத்தவர் நீரே இந்த உண்மையும் நன்மையும் சொல்லிக் கொடுக்க யார் இருக்காங்க-இயேசப்பா
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் வானத்திலும் பூமியிலும் நீர் ஒருவரே பரிசுத்தர் யார் உமக்கு பயப்படாமல் போகக்கூடும் ஐயா எல்லா ஜாதிகளும் உமக்கு முன்பாய்த் தொழுதுகொள்வார் மெய்யாய் இந்த உண்மையும் நன்மையும் சொல்லிக் கொடுக்க யார் இருக்காங்க-இயேசப்பா
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal